தீவிரவாதிகளை சுட்டுக் கொல்லும் நடவடிக்கையின்போது மொத்தம் 112 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
New Delhi: கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 700 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் மட்டும் ஜூன் 16-ம்தேதி வரையில் 113 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 2018-ல் 257 பேரும், 2017-ல் 213 பேரும், 2016-ல் 150 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளை சுட்டுக் கொல்லும் நடவடிக்கையின்போது மொத்தம் 112 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மக்களவை கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷான் ரெட்டி அளித்துள்ள பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பதிலில், தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்தப் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.