This Article is From Jan 28, 2019

மைனஸ் 28 டிகிரியில் ஜம்மு காஷ்மீர்

உறைய வைக்கும் பனிப்பொழிவு ஜம்மு காஷ்மீரின் சில இடங்களில் ஏற்பட்டு வருகிறது. லேவில் மைனஸ் 15.5 டிகிரியும், கார்கில் பகுதியில் மைனஸ் 20.7 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவானது.

மைனஸ் 28 டிகிரியில் ஜம்மு காஷ்மீர்

ரஜவ்ரி மாவட்டத்தில் பனி சூழ்ந்திருக்கும் காட்சி

Srinagar:

ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் உள்ள டிராஸ் நகரத்தில் இன்று மைனஸ் 28 டிகிரியாக வெப்பநிலை பதிவாகி உள்ளது. சமீப காலத்தில் மிக மிக குறைந்த வெப்பநிலையாக இது பதிவாகி இருக்கிறது. 

நேற்று அதிகபட்சமாக டிராசில் மைனஸ் 10.1 டிகிரி செல்சியஸ் குளிர் காணப்பட்டது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் காணப்படுகிறது. இது இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது. 

ஸ்ரீநகரில் மைனஸ் 1.4 டிகிரியும், பகல்காமில் மைனஸ் 13 டிகிரியும், குல்மார்க்கில் மைனஸ் 12 டிகிரியும் பதிவாகி இருந்தது. 

லேவில் மைனஸ் 15.5 டிகிரியும், கார்கில் பகுதியில் மைனஸ் 20.7 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவானது. 

.