This Article is From Aug 04, 2019

‘வெள்ளைக் கொடியுடன் வாருங்கள்’ : பாகிஸ்தானுக்கு நிபந்தனை விதித்த இந்திய ராணுவம்!!

இந்திய ராணுவத்தினர் தவறுதலாக எல்லை தாண்டினால், அவர்களை கொன்று உடலை சிதைப்பது என்பது பாகிஸ்தானின் வழக்கமாக இருந்து வருகிறது.

‘வெள்ளைக் கொடியுடன் வாருங்கள்’ : பாகிஸ்தானுக்கு நிபந்தனை விதித்த இந்திய ராணுவம்!!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தானில் சுமார் 25 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

New Delhi/Srinagar:

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. அவர்களது உடல்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் வெள்ளைக் கொடியுடன் வர வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் கெரான் செக்டாரில் இந்த அதிரடி நடவடிக்கையை இந்திய ராணுவம் நேற்று மேற்கொண்டது. இங்கு பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் இந்தியாவுக்குள் ஊருடுவ முயன்றனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் கேட்காத நிலையில் இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 5 பேர் உயிரிழந்தார்கள்.

பொதுவாக இந்திய ராணுவத்தினர் தவறுதலாக எல்லை தாண்டினால், அவர்களை கொன்று உடலை சிதைப்பது என்பது பாகிஸ்தானின் வழக்கமாக இருந்து வருகிறது.

இந் நிலையில் வீரர்களின் உடலை மீட்க வேண்டும் என்றால் பாகிஸ்தான் வெள்ளைக் கொடியுடன் வரட்டும் என்று இந்திய ராணுவம் கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது.

அமர்நாத் புனித யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமர்நாத் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று 2 நாட்களுக்கு முன்பாக உத்தரவு வெளியானது. இந்த நிலையில் நேற்று ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தானில் சுமார் 25 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

.