ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு முன்னேற்றம் அடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
New Delhi: பாலகோட் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு தீவிரவாதிகள் ஊடுருவல் 43 சதவீதம் குறைந்திருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனை மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாத ஊடுருவல் தொடர்பாக மக்களவையில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. இதற்கு அளிக்கப்பட்ட பதிலில், 'பாதுகாப்பு படை மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமைகள் முன்னேற்றம் கண்டுள்ளன. குறிப்பாக ஊடுருவல் சம்பவங்கள் 43 சதவீதம் குறைந்திருக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தின்போது பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீத சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை இந்திய விமானப்படை நடத்தியது. புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் வீர மரணம் அடைந்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ராணுவம் தீர்மானித்திருந்தது.
இதையடுத்து கடந்த பிப்ரவரி 26-ம்தேதி 12 மிராஜ் ரக விமானங்கள் பாலகோட்டிற்குள் சென்று தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள்