This Article is From Aug 13, 2019

பலத்த பாதுகாப்புக்கு இடையே ஜம்மு காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாடு! மத்திய அரசு அறிவிப்பு!!

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து அங்கு உள்ளூர் அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

பலத்த பாதுகாப்புக்கு இடையே ஜம்மு காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாடு! மத்திய அரசு அறிவிப்பு!!

அக்டோபர் மாதம் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு இடையே முதலீட்டாளர்கள் மாநாடு அக்டோபரில் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து நடைபெறவுள்ள முதல் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜம்மு காஷ்மீரில் சுமார் 70 ஆண்டுகளாக நீடித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்துள்ளது. இதேபோன்று காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மாநிலம் பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

boudaahk

இதற்கு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னெச்சரிக்கையாக அவர்களை மத்திய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். பெரும் பிரச்னைகளுக்கு மத்தியில் பக்ரீத் பண்டிகையும் காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. 

இந்த சூழலில் அக்டோபர் மாதம் முதலீட்டாளர்கள் மாநாடு ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 12-ம்தேதி தொடங்கும் மாநாடு 14-ம்தேதி வரைக்கும் ஸ்ரீநகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் குறைந்தது 8 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காஷ்மீர் விவகாரம் குறித்து கடந்த வியாழன் அன்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் காஷ்மீரில் முதலீடுகள் குவியும், இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்று பேசியிருந்தார். இந்த சூழலில் முதலீட்டாளர்கள் மாநாடு காஷ்மீரில் அக்டோபரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

.