This Article is From Nov 21, 2018

ஜம்மு காஷ்மீர் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவு

உதம்பூர் மாவட்டத்தில்தான் வாக்கு சதவீதம் அதிகமாக உள்ளது. இங்கு 84 சதவீத வாக்குகள் பதிவாயிருக்கின்றன

ஜம்மு காஷ்மீர் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவு

வாக்குப்பதிவையொட்டி 2179 மையங்கள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

Jammu:

ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது.

இதுகுறித்து காஷ்மீரில் தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா கூறுகையில், “ ஜம்மு பகுதியில் மட்டும் 80.4 சதவீத வாக்குகளும், காஷ்மீர் பகுதியில் 52.2 சதவீத வாக்குகளும் பதிவாகி இருக்கின்றன. அமைதியான முறையில் தேர்தலை நடத்த கூடுதல் கவனம் செலுத்தினோம். தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

மொத்தம் 14 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது. இவற்றில் 7 மாவட்டங்கள் ஜம்முவிலும், 7 மாவட்டங்கள் காஷ்மீரிலும் உள்ளன. மாநிலத்தில் அதிகபட்சமாக உதம்பூரில் 83.9 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. மிகக் குறைந்தளவாக அனந்த்நாக் மாவட்டத்தில் 1 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது” என்றார்.

3-ம் கட்டமாக வரும் 24-ம்தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் 2,179 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

.