மொத்தம் 76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Jammu/Srinagar: ஜம்மு காஷ்மீரில் 6-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன.
ஜம்மு பகுதி மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பாதுகாப்பு காரணங்களுக்காக மதியம் 2 மணிக்கெல்லாம் முடித்துக் கொள்ளப்பட்டது.
இதையொட்டி காஷ்மீரில் 410 மற்றும் ஜம்முவில் 2,764 என மொத்தம் 3,174 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 771 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கணிக்கப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மொத்தம் 9 கட்டங்களாக டிசம்பர் 11-ம் தேதி வரைக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடைசியாக ஜம்மு காஷ்மீரில் கடந்த 2011-ல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.