Read in English
This Article is From Dec 02, 2018

காஷ்மீரில் அமைதியாக முடிந்தது உள்ளாட்சி தேர்தல்

ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தினர்.

Advertisement
இந்தியா

மொத்தம் 76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jammu/Srinagar:

ஜம்மு காஷ்மீரில் 6-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன.
ஜம்மு பகுதி மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பாதுகாப்பு காரணங்களுக்காக மதியம் 2 மணிக்கெல்லாம் முடித்துக் கொள்ளப்பட்டது.

இதையொட்டி காஷ்மீரில் 410 மற்றும் ஜம்முவில் 2,764 என மொத்தம் 3,174 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 771 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கணிக்கப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மொத்தம் 9 கட்டங்களாக டிசம்பர் 11-ம் தேதி வரைக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடைசியாக ஜம்மு காஷ்மீரில் கடந்த 2011-ல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement