This Article is From Nov 18, 2018

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிஷ்த்வார் மாவட்டத்தின் அதோலி மையத்தில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளது.

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவு

ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் 79.5 சதவீத வாக்குகள் பதிவாகின.

Jammu:

ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் பகுதியில் உள்ள 16 ப்ளாக்குகள், ஜம்முவில் 21 மற்றும் லடாக் பகுதியில் 10 ஆகிய 47 ப்ளாக்குகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி ஷாலீன் காப்ரா, “ பூஞ்ச் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. கிஷ்த்வார் மாவட்டத்தில் அதோலி பகுதியில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக அங்கு மட்டும் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நடந்து வருவதால் அங்கு ஏற்கனவே நடைபெறவிருந்த வாக்குப்பதிவு 2 ஆண்டுகள் தாமதமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் நவம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது.

.