This Article is From Aug 05, 2019

“காஷ்மீர் தீர்வு ஆரம்பித்துவிட்டது!”- பற்றவைக்கும் பாஜக ஆதரவு நடிகர்

“காஷ்மீரில் இருக்கும் பிரச்னை, அம்மாநிலத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370-ஐ நீக்கினால் சரியாகிவிடும்”- அனுபம் கெர்

“காஷ்மீர் தீர்வு ஆரம்பித்துவிட்டது!”- பற்றவைக்கும் பாஜக ஆதரவு நடிகர்

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 35,000 துணை ராணுவப் படையினர் காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Mumbai:

மத்திய அரசின் நடவடிக்கைகளால் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பாலிவுட் நடிகர் அனுபம் கெர், “காஷ்மீர் தீர்வு ஆரம்பித்துவிட்டது” என்று கூறி பரபரப்பைக் கூட்டியுள்ளார். 

கடந்த ஒரு வாரமாக ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் பெருமளவு குவிக்கப்பட்டு வருகின்றனர்.  கடந்த வெள்ளிக் கிழமை, மத்திய அரசு, மிகவும் அசாதாரண வகையில் அமர்நாத் யாத்ரிகர்களை உடனடியாக மாநிலத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது. இதனால் மாநிலத்தில் பதற்றமான நிலை உள்ளது. மக்களும் அன்றாடப் பொருட்களை வீட்டில் வாங்கிக் குவித்த வண்ணம் உள்ளனர்.  

மேலும் மாநிலத்தில் உள்ள முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்டி மற்றும் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இதுவும் சிறப்புப் பிரிவு திருத்தத்துக்கான நடவடிக்கைதான் என்று சொல்லப்படுகிறது. 

முன்னதாக கெர், “மொத்த நாடும் பிரதமர் மோடியின் அரசுக்கு ஆதரவாக உள்ளது. அது ஒரு சிறிய மெஜாரிட்டி கிடையாது. இது மிகப் பெரும் வெற்றி. எதிர்க்கட்சிகள் அமைதியாக இருந்த அரசை பணி செய்ய விட வேண்டும்” என்று கூறியிருந்தார். 

மேலும் அவர், “காஷ்மீரில் இருக்கும் பிரச்னை, அம்மாநிலத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370-ஐ நீக்கினால் சரியாகிவிடும்” என்றும் தெரிவித்திருந்தார். 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்துகளை பாதுகாப்பதில் அங்கிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. சட்டப் பிரிவு 35ஏ என்பது, ஜம்மூ காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங்கால் அறிமுகம் செய்யப்பட்டது. 1927 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்தச் சட்டப் பிரிவின் மூலம், வெளி மாநிலத்தவர்கள் ஜம்மூ காஷ்மீரில் சொத்து வாங்க முடியாது என்றும் அரசு வேலைகளில் சேர முடியாது என்றும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது. ஆர்ட்டிகல் 370-ன் ஒரு பிரிவுதான் 35ஏ. 370 மூலம், காஷ்மீருக்கென்று தனியாக சட்ட சாசனம், கொடி, தேசிய பாதுகாப்பைத் தவிர்த்து சட்டம் இயற்றிக் கொள்ளும் உரிமை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. 

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 35,000 துணை ராணுவப் படையினர் காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரின் பதற்றமான பகுதிகளில் அவர்கள் ஊஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

.