தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஒத்திவைப்பு முடிவை எடுத்திருக்கிறது பல்கலை.
New Delhi: தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் ஜம்மு பல்கலைக் கழகம் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது. இன்றும், நாளையும் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக தேர்வுகள் நடைபெறும் தேதி இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று ஜம்மு பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. புல்வாமாவில் 40 ரிசர்வ் போலீசார் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் வெளியே வர முடியாது என்பதால் தேர்வு தேதிகளை ஒத்தி வைத்து ஜம்மு பல்கலை. நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து ஜம்மு நகரில் அனைத்து கடைகளும், மார்க்கெட்டுகளும் மூடப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஹைகோர்ட் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்துள்ளனர்.