This Article is From Aug 08, 2018

ஜப்பானைத் தாக்க உள்ள சூறாவளி… உஷார் நிலையில் அரசு!

ஜப்பானில் தொடர்ந்து இயற்கை சீற்றங்களும் தட்பவெப்ப நிலையும் மாறி வருகிறது

ஜப்பானைத் தாக்க உள்ள சூறாவளி… உஷார் நிலையில் அரசு!
Tokyo:

ஜப்பானுக்கு அருகில் மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளிக் காற்று உருவாகியுள்ளது. இதனால், அங்கு கனமழைக்கும், புயல் காற்று வீசுவதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த சூறாவளிக் காற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவைத்தான் புரட்டிப் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூறாவலிக்கு ‘ஷான்ஷான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது சூறாவளி மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பினும், கடலில் இருந்து நிலத்துக்குப் பக்கத்தில் வர வர, அதன் வீரியம் குறையும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக நாளை மதியம் அல்லது காலையில் ஷான்ஷான் சூறாவளி டோக்கியோவைத் தாக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம், டோக்கியோ நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்தில், 350 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 180 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியால் டோக்கியோவைச் சுற்றியுள்ள பகுதிகள் தான் அதிகம் பாதிக்கப்பட உள்ளது. முன்னர் பாதிப்புக்கு உள்ளான மேற்கு ஜப்பான் பகுதிகள் தப்பித்துவிடும் எனப்படுகிறது.

ஜப்பானில் தொடர்ந்து இயற்கை சீற்றங்களும் தட்பவெப்ப நிலையும் மாறி வருகிறது. சமீபத்தில் தான் அங்கு 41.1 செல்சியஸ் அளவிலான வெப்பக் காற்று வீசியது. இதனால் அங்கு 132 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடும் மழைக்கு மீண்டும் ஜப்பான் தயாராகி வருகிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.