Read in English
This Article is From Oct 29, 2018

புவி வெப்பமயமாதலை கண்காணிக்க செயற்கைகோளை விண்ணில் செலுத்திய ஜப்பான்

விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கை கோளுக்கு கோசாட்-2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது

Advertisement
உலகம்

எச்2ஏ ராக்கெட் மூலமாக டனெகாஷிமா விண்வெளி நிலையத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது.

Tokyo:

புவி வெப்பமயமாதலை குறைக்க உலகின் அனைத்து நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக புவி வெப்பமயமாதலின் அளவைக் கண்காணிக்க ஜப்பான் செயற்கை கோள் ஒன்றை விண்ணில் நிறுத்தியுள்ளது.

இந்த செயற்கை கோளுக்கு கோசாட் - 2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. டனெகாஷிமா விண்வெளி நிலையத்தில் வைத்து திங்களன்று மதியம் 1.08-க்கும் எச்2ஏ ராக்கெட் மூலமாக இந்த செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட் புறப்பட்டுச் சென்ற 16 நிமிடங்களில் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள் புவி வெப்ப மயமாதலை ஏற்படுத்தும் வாயுவின் அளவை கணக்கீடு செய்யும்.

இதேபோன்று மீத்தேன், ஈத்தேன் மற்றும் சில வாயுக்களின் அளவு குறித்தும் கோசாட்-2 செயற்கை கோள் தகவல் அளிக்கும்.

Advertisement
Advertisement