Read in English
This Article is From Jan 22, 2019

ஜப்பான் இளவரசியின் திருமணம் தடைப்பட்டதற்கு காரணம் பணப்பிரச்சனையா?

கெய் மற்றும் மாகோ இருவருக்குமிடையே ராயல் வெட்டிங் 2018ம் ஆண்டு கடைசியில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. 

Advertisement
உலகம்

ஜப்பான் இளவரசி மாகோவின் திருமணம் அவரது காதலனின் நிதி பிரச்னை காரணமாக தடைப்பட்டுள்ளது.

Tokyo:

ஜப்பான் இளவரசி மாகோவின் திருமணம் அவரது காதலனின் நிதி பிரச்னை காரணமாக தடைப்பட்டுள்ளது.

கெய் மற்றும் மாகோ இருவருக்குமிடையே ராயல் வெட்டிங் 2018ம் ஆண்டு கடைசியில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. 

ஆனால் திடீரென இந்த திருமணம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கெய் கோமுரோவின் குடும்பம் நிதி நெருக்கடியில் உள்ளதாலும், அவரது தாயார் தனது முன்னாள் கணவரிடம் வாங்கிய 40 லட்சம் யென்னை திரும்ப தராததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கெய் கோமுரோ தனது அறிக்கையில் "நானும் எனது தாயும் நிதி வாங்கியது உண்மைதான். அதை அடைத்துவிட்டோம். 2012ம் ஆண்டு அவரும் என்  தாயும் பிரிந்து விட்டனர். அவரிடம் நிச்சயதார்த்ததுக்கு வாங்கிய பணத்தை மட்டும் திரும்ப தரவில்லை. 2013ல் அதை திரும்ப கேட்டார். ஆனால் என் தாய் அதனை மறுத்துவிட்டார். அதன்பின் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. ஆனால் மீண்டும் இப்போது ராயல் வெட்டிங் அறிவிக்கப்பட்டபின் அவர் திரும்ப பணத்தை கேட்கிறார்" என்றார்.

திருமணத்துக்கு தயாராக இன்னும் காலம் தேவைப்படுகிறது. அதனால் திருமணம் 2020க்கு ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் சரியான இடம், தேதி ஆகியவற்றை எதிர்பார்த்திருக்கிறோம் என்று கூறப்பட்டது. இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இளவரசி மகோவின் தந்தை அகின்சோ, "அவர்கள் பிரச்னைகளை தீர்த்துக்கொண்டு வரட்டும் அதன்பின் திருமணம் நடைபெறும்" என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement