This Article is From Dec 22, 2018

சென்னை மெட்ரோ உள்பட 3 திட்டங்களுக்கு ரூ. 6,600 கோடி கடன் வழங்கும் ஜப்பான்

இந்தியா - ஜப்பான் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடன் வழங்குகிறது ஜப்பான் அரசு.

சென்னை மெட்ரோ உள்பட 3 திட்டங்களுக்கு ரூ. 6,600 கோடி கடன் வழங்கும் ஜப்பான்

கடன் உதவி மூலமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவை விரைவாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

New Delhi:

சென்னை மெட்ரோ ரயில் உள்பட 3 திட்டங்களுக்கு ரூ. 6,600 கோடியை கடனுதவியை ஜப்பான் அரசு வழங்குகிறது.

இதுதொடர்பாக அந்நாட்டின் நிதியமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், '' இந்தியாவில் செயல்படுத்தவிருக்கும் 3 திட்டங்களுக்கு ரூ. 6,600 கோடி கடனுதவி வழங்கப்படும். இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்  இந்த உதவி செய்யப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டம், இந்தியா - ஜப்பான் கூட்டு முயற்சி திட்டம், பால்வள மேம்பாடு ஆகியவை ஜப்பான் நிதியதவி செய்யவிருக்கும் 3 திட்டங்களாகும்.

சென்னையில் போக்குவரத்தை சீர்படுத்தும் நோக்கத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பால்வள மேம்பாடு மூலம் பால் உற்பத்தியை அதிகரித்தல், சந்தைப்படுத்துதல், விவசாயிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

.