இந்த பயணம் மோடியின் 3-வது ஜப்பான் பயணமாக அமையும்
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2 முறை ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள இருநாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி ஜப்பான் செல்கிறார்.
இந்த பயணம் தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது-
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் பல்வேறு துறைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இந்தப பயணம் இந்தியா - ஜப்பான் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும்.
இரு நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை இந்த பயணம் மேம்படுத்தும். சுகாதாரம், டிஜிட்டல் தொழில்நுட்பம், விவசாயம், உணவு பதப்படுத்துதல், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் எனது ஜப்பான் பயணம் அமையும்.
நாம் தொடகியுள்ள மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற பல திட்டங்களுக்கு ஜப்பான் நாடு அதிகளவில் உதவி செய்து வருகிறது. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)