Read in English
This Article is From Jan 13, 2020

இந்த கோடீஸ்வரர்க்கு கேர்ள் ப்ரெண்ட்டானால் நிலாவுக்கு போகலாம்...!

2023ஆம் ஆண்டில் அல்லது அதற்கு பிறகு எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் பயணத்தில் முதல் தனியார் பயணியாக சந்திரனுக்கு பயணம் செய்யவுள்ளார்.

Advertisement
விசித்திரம்

Yusaku Maezawa has launched an ad looking for a girlfriend.

ஜப்பானிய கோடீஸ்வரர் ஒருவர் தனக்கு ‘கேர்ள்ப்ரெண்ட்' வேண்டுமென்றும் அப்படி வரும்பெண்ணுடன் சேர்ந்து ராக்கெட்டில் சந்திரனை சுற்று வரப்போவதாகவும் விளம்பரம் ஒன்றை செய்துள்ளார். சமீபத்தில் ஜப்பானிய நடிகையுடன் வாழ்ந்து பிரிவினை அறிவித்த கோடீஸ்வரர் யூசாகு மெய்சாவா, வாழ்க்கையை அனுபவிக்க விரும்வுவதாகவும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட சிங்கிள் பெண்ணிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.

மேட்ச்மேக்கிங் செய்யும் வலைத்தளம் டிவி ஷோவாக இந்த நிகழ்ச்சியை மாற்றுகிறது. 

நடுத்தர வயதில் தனிமை காரணமாக இந்த யோசனைக்கு ஒப்புக் கொண்டதாக இந்த கோடீஸ்வர மாப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

Advertisement

“எனக்கு வயது 44, தனிமையும் வெறுமையும் என்னில் மெதுவாக எழத் தொடங்கியுள்ளது. நான் நினைக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் ஒரு பெண்ணைத் தொடர்ந்து நேசிக்க விரும்புகிறேன்” என்று விளம்பரத்தில் கூறியுள்ளார்.

மெய்சாவா தனது ட்விட்டர் பதிவிலும் இதை பதிவிட்டுள்ளார். “சந்திரனுக்கு பயணம் செய்யும் முதல் பெண்ணாக ஏன் நீங்கள் இருக்கக்கூடாது...?” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 17, 2020 விண்ணப்பதாரர்கள் மார்ச் இறுதிக்குள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் பேஷன் நிறுவனமான சோஸோவின் தலைவர். இதற்கு முன்னதாக 'யாகூ' நிறுவனத்தை விற்றார். 

Advertisement

இவர் 2023ஆம் ஆண்டில் அல்லது அதற்கு பிறகு எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் பயணத்தில் முதல் தனியார் பயணியாக சந்திரனுக்கு பயணம் செய்யவுள்ளார்.

Advertisement