பாஜகவின் மூத்த தலைவராக இருந்த ஜஸ்வந்த் சிங் காங்கிரசில் சேர்ந்துள்ளார்.
Jaipur: ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்றைக்கு வெளியிடப்பட்ட காங்கிரசின் வேட்பாளர்கள் பட்டியலில் 32 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் அதிமுக்கியமாக குறிப்பிடத்தகும் வகையில், முதல்வர் வசுந்தரா ராஜே போட்டியிடும் ஜல்ரப்தான் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் மன்வேந்திரா சிங் போட்டியிடுகிறார்.
பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரசில் இணைந்த மூத்த அரசியல்வாதி ஜஸ்வந்த் சிங்கின் மகன்தான் இந்த ஜஸ்வேந்திர சிங். முதல்வர் வசுந்தரா ராஜே தான் போட்டியிடும் ஜல்ரப்தான் தொகுதியில் கடந்த 2003-ல் இருந்து எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு எதிராக ஜஸ்வந்த் சிங்கின் மகனை காங்கிரஸ் நிறுத்தியிருப்பது முக்கிய அரசியல் தந்திரமாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஜல்ரப்தான் சிங் கூறுகையில், முதல்வர் வசுந்தராவை எதிர்த்து போட்டியிடுவதற்கு தயாராக உள்ளேன். ராஜ்புத் தலைவர் ஜஸ்வந்த் சிங்கை பாஜக அவமானப்படுத்தி உள்ளது என்றார்
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகள் 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைக்கே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த 2013-ல் நடைபெற்ற தேர்தலின்போது பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது.