This Article is From May 27, 2020

'நவீன இந்தியாவின் சிற்பி' - நேரு நினைவு தினத்தில் ராகுல் காந்தி ட்வீட்!

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாட்டின் முதல் பிரதமராக நேரு பதவியேற்றார். 1947-ம் ஆண்டு முதல் தான் மறைந்த 1964, மே 27-ம்தேதி வரை இந்திய பிரதமர் பொறுப்பில் இருந்தவர் நேரு என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
இந்தியா

1919-ம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்த நேரு, காந்தியுடன் சேர்ந்து விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தார்.

New Delhi:

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 56 வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில், நேருவை நவீன இந்தியாவின் சிற்பி என்று பாராட்டி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

பண்டித ஜவகர்லால் நேரு இந்தியாவின் விடுதலைக்காக போராடிய வீரம் மிக்க தலைவர். நவீன இந்தியாவை வடிவமைத்த சிற்பி. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். மிகவும் சோதனை நிறைந்த காலகட்டத்தில் முக்கிய பொறுப்புக்கு வந்த நேரு, உலகத் தரம் வாய்ந்த திட்டங்களால் இந்தியாவை வடிவமைத்தார். இந்தியாவின் மிகச் சிறந்த மகனான நேருவுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் கடந்த 1889, நவம்பர் 14-ம்தேதி ஜவகர்லால் நேரு பிறந்தார். குழந்தைகள் மீது பேரன்பு கொண்ட அவரது பிறந்த நாள், குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

1919-ம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்த நேரு, காந்தியுடன் சேர்ந்து விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தார். 1923-ம் ஆண்டில் அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்புக்கு வந்தார். 

Advertisement

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாட்டின் முதல் பிரதமராக நேரு பதவியேற்றார். 1947-ம் ஆண்டு முதல் தான் மறைந்த 1964, மே 27-ம்தேதி வரை இந்திய பிரதமர் பொறுப்பில் இருந்தவர் நேரு என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement