This Article is From Jan 21, 2019

தலைமைச் செயலகத்தில் யாகம் நடந்துச்சு? அதை நீங்க பாத்தீங்க? ஜெயக்குமார்

தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தியதற்கான ஆதாரம் இருக்கிறதா?.யாகம் நடத்தியதை யார் பார்த்தார்கள்?. என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளதாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில், இன்று அதிகாலை 3 மணி முதல் 8:30 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய யாகம் வளர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இல்லாத நேரத்தில் எதற்காக ஓ. பன்னீர் செல்வம்  இந்த திடீர் யாகத்தை நடத்தினார்? முதல்வர் மீது உள்ள வழக்குகள் எல்லாம் முடியும் போது, நிச்சயம் எடப்பாடி பழனிசாமி கைதாகிவிடுவார். இது சீக்கிரமாக நடைபெற்றால்தான் தான் முதல்வராக முடியும் என ஓ.பன்னீர்செல்வம் இந்த யாகத்தை நடத்தியுள்ளார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் மு.க. ஸ்டாலின்.  

Advertisement

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தியதற்கான ஆதாரம் இருக்கிறதா?. இது வதந்தியே. அவர் யாகம் நடத்தியதை யார் பார்த்தார்கள்?.

அதிமுக கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் செய்த சதிதான் இது. காலையில் எழுந்த உடனே என்ன சூழ்ச்சி செய்யலாம் என நினைக்கிறார்கள். கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கேற்ப எதிரிகள் கெட்டு போவார்கள். எடுபிடி, துதிபாடுவது, அடிமை சாசனம் இவையெல்லாம் அதிமுகவின் அகராதியில் இல்லை என்று அவர் கூறினார்.

Advertisement

 

மேலும் படிக்க : தலைமைச் செயலகத்தில் திடீர் யாகம் ஏன்? ஓ.பி.எஸ் பதிலளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்!
 

Advertisement