This Article is From Oct 05, 2019

ஜெயலலிதா பயோ பிக் : எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் அரவிந்த் சுவாமி!!

ஜெயலலிதாவின் வரலாற்றுப் படத்திற்கு 'தலைவி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை 'மதராச பட்டினம்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் இயக்கி வருகிறார். இந்தியில் இந்த திரைப்படம் 'ஜெயா' என்ற பெயரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Entertainment Edited by

நடிகர் அரவிந்த் சுவாமி.

Mumbai:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயோபிக்கில் அரவிந்த் சுவாமி எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார்.

தமிழில் இந்த திரைப்படத்திற்கு 'தலைவி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியில் 'ஜெயா' என்ற பெயரில் திரைப்படம் வெளியாகும். இந்த திரைப்படத்தை 'மதராசபட்டினம்', 'தெய்வ திருமகள்' படத்தை இயக்கிய விஜய் இயக்குகிறார். 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016 டிசம்பர் 5-ம்தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 'புரட்சி தலைவி' என்ற பெயரில் ஜெயலலிதா அவர் பரவலாக அறியப்படுகிறார். அதிமுக தொண்டர்கள் அவரை 'அம்மா' என்று அழைக்கின்றனர். 

இந்த திரைப்படத்தில் முக்கிய அப்டேட்டாக, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வேடத்தில் பிரபல நடிகர் அரவிந்த் சுவாமி நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தார். 1972-ல் அவர் திமுகவை விட்டு வெளியேறி அதிமுக வை ஆரம்பித்த பின்னர் 1977-ல் அவர் தமிழக முதல்வரானார்.

Advertisement

தான் உயிரிழக்கும் 1987 டிசம்பர் 24-ம்தேதி வரையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர். முதல்வர் பொறுப்பில் இருந்தார். 

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கடந்த 1965-லிருந்து 1973-வரையில் இருவரும் பல்வேறு படங்களில் நடித்தனர். இவற்றில் 28 படங்கள் மெகா ஹிட் ஆனது. 

Advertisement

எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிப்பவருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகள் சரளமாக தெரிந்திருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பினர் விரும்பினர். இதற்கு ஏற்றவராக அரவிந்த் சுவாமி இருந்ததால் அவர் எம்.ஜி.ஆர். வேடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 

Advertisement