ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் இன்று.
ஹைலைட்ஸ்
- மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் இன்று
- பிரதமர் மோடி ஜெயலலிதாவை புகழ்ந்து ட்விட் செய்துள்ளார்
- அதிமுக சார்பாக ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடக்கின்றன
தலைமுறை கடந்து நினைவில் நிற்பார் என்று ஜெயலலிதாவை புகழ்ந்து பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு நல உதவிகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.
அதிமுக சார்பாக பொதுக்கூட்டங்கள் இன்றைய தினம் நடைபெற்று வருகின்றன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி 71 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில் ஜெயலலிதாவை பாராட்டி பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘'ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்திக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அவர் செய்த உழைப்பு தலைமுறை கடந்தும் நினைவில் நிற்கும். சிறந்த நிர்வாகி மற்றும் வலிமையான தலைவராக ஜெயலலிதா இருந்தார். அவரது நலத்திட்டங்கள் ஏராளமான மக்களுக்கு உதவியாக இருந்தது.'' என்று கூறியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)