This Article is From Apr 26, 2019

அப்போலோ தொடர்ந்த வழக்கு: ஜெ., மரண விசாரணைக்கு இடைக்காலத் தடை!

Jayalalithaa Death: சென்னை, கீர்ம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்தான், ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்

அப்போலோ தொடர்ந்த வழக்கு: ஜெ., மரண விசாரணைக்கு இடைக்காலத் தடை!

Jayalalithaa Death Case: விசாரணை ஆணையம் சார்பில் அப்போலோ மருத்துவமனைக்கும், அதன் மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • முன்னதாக அப்போலோ சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது
  • அந்த வழக்கில் விசாரணை ஆணையத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை
  • ஜெ., மரணம் தொடர்பாக ஓராண்டுக்கு மேலாக கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது
New Delhi:

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை குறித்து அப்போலோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அடுத்து, ஆறுமுகசாமி கமிஷன் விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, கீர்ம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்தான், ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லப்பட்டதை அடுத்து, ஓய்வு பெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் சார்பில் அப்போலோ மருத்துவமனைக்கும், அதன் மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அப்போலோ உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதில்தான் தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

.