This Article is From Dec 28, 2018

ஜெ., மரண விசாரணை: லண்டன் மருத்துவர் ஆஜராக சம்மன்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது

ஜெ., மரண விசாரணை: லண்டன் மருத்துவர் ஆஜராக சம்மன்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஜன 9-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகுமாறு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இதில், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் என இதுவரை 142 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.

இந்தநிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்காக ஆஜராக ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராக வில்லை. அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராக, ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால், விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை.

இதனால், விஜயபாஸ்கர் வரும் ஜன.7-ம் தேதி ஆஜராகுமாறு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதே போல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜன.8-ம் தேதியும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜன.11-ம்தேதியும் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இதேபோல், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவும் வரும் ஜன 9-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 

.