Read in English
This Article is From Jun 12, 2018

26 ஏழை மாணவர்களை JEE வெற்றிப் பெறச் செய்த சூப்பர் ஆசிரியர்

முன்னேற்றங்கள் காணாத தொலைதூரங்களில் இருந்து வரும் திறமையான மாணவர்கள், போராடி போட்டியிட்டு வெற்றி பெருவதை பார்க்கும் போது, நிறைவாக உள்ளது

Advertisement
Education (with inputs from PTI)

26 Out Of 'Super 30' Crack JEE Advanced. Credit Anand Kumar For Their Success

Highlights

  • சூப்பர் 30 அகாடமியின் 26 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்
  • ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி தருகிறார் ஆனந்த் குமார்
  • உலக அளவில் புதுமையான பயிற்சிக் கூடம் என நியூஸ் வீக் புகழாரம்
New Delhi: புதுடில்லி: JEE அட்வான்ஸ்டு 2018 நுழைவுத் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கணித வல்லுநர் ஆனந்த் குமார் நடத்தும் ‘சூப்பர் 30’ அகாடமியில் இருந்து 26 மாணவர்கள் நுழைவுத் தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளனர். கடந்த 2002 ஆம் ஆண்டு திரு ஆனந்த் குமாரால் தொடங்கப்பட்ட இந்த அகாடமியில், பின் தங்கிய குடும்ப நிலையில் இருந்து வரும் திறமையான மாணவர்களுக்கு JEE தேர்வுகளுக்கான பயிற்சி அளித்து வருகிறார்.

‘முன்னேற்றங்கள் காணாத தொலைதூரங்களில் இருந்து வரும் திறமையான மாணவர்கள், போராடி போட்டியிட்டு வெற்றி பெருவதை பார்க்கும் போது, நிறைவாக உள்ளது” என்றார் ஆனந்த்.

‘சூப்பர் 30’ அகாடமியில் பயிற்சி பெரும் மாணவர்கள் அனைவரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த ஆண்டு JEE அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் ஒனிர்ஜித் கோசுவாமியின் தந்தை கான்பூரில் உள்ள சிறு தொழிற்சாலையில் பணியாற்றி வருபவர். JEE அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய கனவு என்று பிடிஐயிடம் கூறினார்,

Advertisement
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாணவரான சூரஜ் குமார், என் தந்தைக்கு ஐஐடி என்றால் என்ன என்பது கூட தெரியாது. ஆனால், என் வெற்றியை கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார் என்று கூறினார்.

“ஆனந்த சார் எங்களுக்கு இலவச பயிற்சி அளித்தது மட்டுமின்றி மன உறுதியோடு இருக்கவும் கற்றுக்கொடுத்தார்” என்றார் சூரஜ்.

Advertisement
இதைப்போன்று, யாஷ் குமார் மற்றும் சூர்யகாந்த் டாஸ் ஆகிய இரு மாணவர்களும் தங்கள் வெற்றிக்கு காரணமானவர், பயிற்சியாளர் ஆனந்த் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த 16 வருடங்களில், சூப்பர் 30யில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஐடியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisement
30 மாணவர்களுக்கு ஓர் ஆண்டிற்கான பயிற்சி அளிப்பது மட்டுமின்றி, உணவு, தங்கும் இடம் ஆகியவையும் இலவசமாக செய்து தருகிறார். அவரது குடும்பத்தினருக்கும் பெரும் ஆதரவாக உள்ளனர்.

பெரும்பாலன மாணவர்கள் முதல் தலைமுறையாக கல்வி அறிவு பெறுபவர்கள். ஆதலால், இந்த வெற்றி அவர்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

Advertisement
2009 ஆம் ஆண்டு, இந்தியாவில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கான லிம்கா புத்தகத்திற்கான உலக சாதனைகளில் இடம்பெற்றுள்ளார் ஆனந்த்.

“சூப்பர் 30 அகாடமியை இன்னும் விரிவாக்கம் செய்ய முயல்கிறேன். ஆனால், அதில் சில தடைகள் உள்ளன. இது போன்று நாடு முழுவதும் உள்ள பல மாணவர்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன” என்றார்.

Advertisement
ஆனந்த் குமாரின் சாதனைகள் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது நியூஸ்வீக் பத்திரிக்கையின் நான்கு புதுமையான பயிற்சிக் கூடங்கள் பட்டியலில் ‘சூப்பர் 30’ இடம்பெற்றுள்ளது.

மேலும், ஆனந்த குமாரின் கதாப்பாத்திரத்தில் நடிகர் ரித்திக் ரோஷன் நடித்து வரும் பாலிவுட் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
Advertisement