Read in English
This Article is From Dec 22, 2018

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்கு 9.5 லட்சம்பேர் விண்ணப்பம்

முதல்கட்ட ஜே.இ.இ நுழைவுத் தேர்வு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

Advertisement
இந்தியா

ஜனவரி மாத தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

New Delhi:

2019-ம் ஆண்டுக்கான  ஜே.இ.இ. நுழைவுத் தேர்வை எழுதுவதற்கு மொத்தம் 9.5 லட்சம்பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி., ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில் நுட்பக் கல்வி நிறுவனப் படிப்பு களில் சேர பிளஸ் டூ தேர்வர்களுக்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.), மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டில் இந்த தேர்வை எழுதுவதற்கு மொத்தம் 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மத்திய மனிதவள அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளளார். ஜே.இ.இ. மெய்ன் தேர்வுகள் ஜனவரி மாதம் 8-ம்தேதி தொடங்கி 12-ம்தேதி வரை நடைபெறவுள்ளது.

கிராமப்புற மாணவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் சுமார் 4 ஆயிரம் பயிற்சி மையங்கள் மத்திய அரசு சார்பாக திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் பலன் அடைந்திருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 

Advertisement