கேரளா அமைச்சர் மணி லுங்கியுடன் அர்ஜென்டினா ஜெர்சி அணிந்து தனது ஆதரவை தெரிவித்தார்
ஹைலைட்ஸ்
- ஆறு டன் மணலை கொண்டு பிஃபா உலகக் கோப்பை மணல் ஓவியம்
- ரசிகர் ஒருவர் 13 லட்சம் கடன் பெற்று தி ஜெர்மனி ஸ்டேடியம் அமைத்துள்ளார்
- கொல்கத்தாவில்,தத்தா FIFAயை மையமாக கொண்டு காத்தாடிகளை வடிவமைத்துள்ளார்
New Delhi: இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாக இருக்கலாம், ஆனால் கால் பந்து அன்றாட வாழ்க்கையின் அங்கமாக திகழ்கிறது. பிஃபா உலகக் கோப்பை கால்பந்து 2018 ரஷியாவில் தொடங்கியது. கால்பந்திற்கு குறிப்பாக கொல்கத்தா மற்றும் வடகிழக்குகளில் (north east) சூரியன் உதிப்பதில் தொடங்கி இரவு வரை அவர்கள் காட்டும் உற்சாகமும் வரவேற்ப்பும் நமது கற்பனையை கடந்தவை.
கேரளாவின் மின்சாரத் துரை அமைச்சர் MM மணி நீல மற்றும் வெள்ளை நிற ஜெர்ஸியை அணிந்து அர்ஜென்டினாவின் மீது தான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அந்த புகைப்படத்தை டிவிட்டரில் # vemos Argentina என்ற கேப்ஷனோடு பதிவு செய்துள்ளார்.
அசாமை சேர்ந்த 57 வயதான தொழிலதிபர் புடுல் போரா(Putul borah) வங்கியில் 13 லட்சம் கடன் பெற்று பெரிய அரங்கத்தை கட்டியதோடு கால்பந்தில் ஆர்வம் உள்ளவர்கள் பார்ப்பதற்காக போட்டியின் நேரடி ஒளிப்பரப்பை அங்கு செய்கிறார்.
ஜெர்மனி அணியின் ரசிகர் ஆனா அவர் தனது அரங்கத்திற்கு “ தி ஜெர்மனி ஸ்டேடியம் ” என்று பெயர் வைத்துள்ளார். கீழ்தளத்திலிருக்கும் அரையில் 100 பேர் இனைந்து கால்பந்து விளையாட்டை 53 இன்ச் கொண்ட திரையில் பார்க்காலம். மேலும் அவர் தனது இல்லத்தை ஜெர்மனி கொடிகளை கொண்டு அலங்கறித்துள்ளார்.
புகழ்பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் ஆறு டன் மணலை கொண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து 2018 மணல் ஓவியத்தை உறுவாக்கியுள்ளார்.
ஒடிசாவில், புபனேஷ்வரின் ஜட்னி(Bhubaneswar's Jatni) கிராமத்தை சேர்ந்த மினியேச்சர் கலைஞர் L. ஈஸ்வர ராவ் பென்சில்கள் மற்றும் கிரையன்களைப் பயன்படுத்தி சிறிய ஃபிஃபா கோப்பைகளை வடிவமைத்துள்ளார். இதன் முலம் விளையாடுகின்ற அணிகளுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறுகிறார் அந்த கலைஞர்.
அர்ஜென்டினாவின் ஸ்டிரைக்கர் லியோனல் மெஸ்ஸியைப் பாராட்டி மேற்கு வங்கத்தில் டிக்கடை வியாபாரி அர்ஜென்டினா கொடியின் நிறமான வெள்ளை மற்றும் நீல நிறத்தால் தனது வீட்டை வண்ணம் அடித்துள்ளார்.
லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அணியை ஆதரிக்கும் நார்த் 24 பர்கானாவின் ஷிவ் ஷங்கர் பத்ரா, அணியின் நீல மற்றும் வெள்ளை வண்ணங்களில் அவரது மூன்று மாடி வீட்டைப் அலங்கறித்துள்ளார். நிஜ வாழ்க்கையில் மெஸ்ஸி விளையாடுவதை பார்ப்பதே அவருடைய ஒரே ஆசை என்கிறார்.
தனது ஆட்டத்தால் உலகையே மயக்க செய்த அர்ஜென்டினாவின் சிறப்புவாய்ந்த டியாகோ மரடோனாவை பார்த்து வளர்ந்தவன் நான். 1986 இல் இரண்டாம் உலகக் கோப்பையை வென்றது அர்ஜென்டினா. மரடோனாவின் வாரிசான லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவை பெருமைப்படுத்துவார் என்று பேட்ரா நம்புகிறார்.
"1986 ஆம் ஆண்டில் மடோனா விளையாடியதை நான் பார்த்ததில் இருந்து, கால்பந்து மீதான எனது அன்பு மிகவும் அதிகமாகி விட்டது," செய்தி நிறுவனமான ANI இடம் திரு பத்ரா கூறியது.
கொல்கத்தாவில், அஜித் தத்தா, ஒரு காத்தாடி வடிவமைப்பாளர் (kite maker), FIFA ட்ராபியை மையமாக கொண்டு காத்தாடிகளை வடிவமைத்துள்ளார். மேலும் அவர் விளையாட்டில் பங்குபெறும் அனைத்து நாடுகளின் கொடிகளையும் வடிவமைத்துள்ளார். இதை ரசிகர்கள் தங்கள் ஆதரவை பிடித்த அணிக்கு தெரிவிக்க வாங்குகின்றனர்.
FIFA உலகக் கோப்பை கால்பந்து 2018 ஆண்டில் ஜூன் 14,2018 முதல் ஜூலை 15 ,2018 வரை நடைபெறும். மொத்தம் 32 அணிகள் மற்றும் 736 வீரர்கள் இந்த போட்டியில் பங்குபெறுகின்றனர். எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு நான்கு நிலைகளில் போட்டிகள் நடைபெறும். அனைத்து குழுக்களிடத்திலும் இரண்டு டாப் அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 16 சுற்றுகள் நடைபெறும். அரை இறுதிப் போட்டிகள் ஜூலை 11 மற்றும் ஜூலை 12 ம் தேதிகளில் நடைபெறவுள்ளன, மற்றும் இறுதிப் போட்டி ஜூலை 15 ம் தேதி லுஜிநிக்கி ஸ்டேடியத்தில்(Luzhniki Stadium) நடைபெறும்.