This Article is From Nov 22, 2018

ஜெட் ஏர்வேஸின் கூடுதல் விமான சேவை டிசம்பரில் தொடக்கம்!

வரும் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து புனேயிலிருந்து சிங்கப்பூருக்கு இடைவிடா சேவையை ஜெட் ஏர்வேஸ் தொடங்கவுள்ளதாக அந்நிறுவனம் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ஜெட் ஏர்வேஸின் கூடுதல் விமான சேவை டிசம்பரில் தொடக்கம்!

ஜெட் ஏர்வேஸ் 20 விமானங்களை இணைப்பதன் மூலம் அதன் இணைப்பு சேவை விரிவுபடுத்தும் என்று தெரிவித்துள்ளது.

Mumbai:

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் செவ்வாயன்று அளித்த தகவலின் படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை மேம்படுத்த 20 புதிய விமானங்களை அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

மேலும், வரும் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து புனேயிலிருந்து சிங்கப்பூருக்கு இடைவிடா சேவையை ஜெட் ஏர்வேஸ் தொடங்கவுள்ளதாக அந்நிறுவனம் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களான, பாங்காங், காத்மண்டு, சிங்கப்பூர், தோஹா, மற்றும் துபாய்க்கு கூடுதல் விமான சேவை தேவைப்படுவதால், டிசம்பர் மாத தொடக்கத்தில் சேவையை விரிவுபடுத்த உள்ளது.

தினமும் டெல்லியிலிருந்து சிங்கப்பூர் மற்றும் பாங்காங்கிற்கு மூன்று முறையும், மும்பையிலிருந்து சிங்கப்பூருக்கு மூன்று முறையும் பயணிக்கக்கூடிய விமான சேவையை விரைவில் தொடங்க உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியுடன் தோஹா மற்றும் மும்பை போன்ற நகரங்களுக்கு விமான சேவையை இருமுறையாக நீட்டிக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லி மற்றும் காத்மண்டிற்கு இடையிலான நான்காவது விமான சேவையையும் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
 

.