Read in English
This Article is From Dec 03, 2018

14 விமானங்களை ரத்து செய்த ஜெட் ஏர்வேஸ்; சம்பளப் பிரச்னை காரணமா..?

இந்தியாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், 14 விமானங்களை ரத்து செய்துள்ளது

Advertisement
இந்தியா
New Delhi:

இந்தியாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், 14 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதற்கு விமானிகளுக்கு பாக்கி வைக்கப்பட்டிருக்கும் சம்பளப் பிரச்னை காரணமாக இருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது மூத்த அதிகாரிகளுக்கும் விமானிகள் பலருக்கும் சரிவர சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஜெட் ஏர்வேஸ் மறுத்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், ‘எங்கள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் விமானிகளிடம் நிலவி வரும் சம்பளப் பிரச்னை குறித்து நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். டிசம்பர் 2 ஆம் தேதியிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன' என்றுள்ளார்.

நமக்கு வரும் தகவல்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தங்களது ஊழியர்கள் பலருக்கு செப்டம்பர் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை செலுத்திவிட்டது என்றும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சம்பளம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement

இந்த விவகாரம் குறித்து நாக், என்று சொல்லப்படும் விமானிகள் அமைப்பிடம் தெரியபடுத்தியுள்ளதாக தெரிகிறது.

ஜெட் ஏர்வேஸ் தரப்பு இது குறித்து மேலும் கூறுகையில், ‘எங்கள் நிறுவனத்துக்குக் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்களது ஆதரவை எங்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்களின் குறைகளை நேரடியாகவும், அவர்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மூலமும் எங்களுக்குத் தெரியபடுத்தியுள்ளனர். அது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்' என்று முடித்துக் கொண்டது.

Advertisement
Advertisement