முழு சம்பள பாக்கியையும் தற்போது தர இயலாது
New Delhi: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற 1-ந்தேதி முதல் விமானங்களை இயக்க மாட்டோம் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகளும் மற்ற ஊழியர்களும் அறிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, விமானிகள் மற்றும் விமான பராமரிப்பு பொறியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய முழு சம்பள பாக்கியையும் தற்போது தர இயலாது என்றும் டிசம்பர் மாத சம்பளத்தை மட்டும் தற்போது வழங்குகிறோம் என்று அந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு என பல காரணிகள் ஜெட் ஏர்வேஸ்-சின் சரிவுக்குக் காரணமாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும் கடன் சுமையால் கடந்த சில வாரங்களில் மட்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த திங்களன்று அரசு வங்கிகளால் பிணையில் எடுக்கப்பட்டுள்ளது. அதின் பெரும்பான்மையான பங்குகளை எடுத்துக் கொண்டு, அரசாங்கத்தின் தலைமையிலான மீட்பு ஒப்பந்தத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இது மிகவும் சிக்கலான செயல்பாடு, இதற்கே நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதனால், உங்களது டிசம்பர் மாதம் சம்பள பாக்கியை மட்டுமே தற்போது எங்களால் தரமுடியும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வினய் டுயூப் ஊழியர்கள் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பணம் நீங்கள் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவாது என்பதை நாங்கள் உணர்கின்றோம், நாங்கள் உங்கள் தியாகங்களை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அவசர அடிப்படையில், கூடுதல் நிதியை பெற தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், மீதமுள்ள சம்பள பாக்கியை விடுவிப்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.