This Article is From Jan 08, 2019

பட்டப் பகலில் காரை மறித்து ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை

சினிமா ஸ்டைலில் 10 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

பட்டப் பகலில் காரை மறித்து ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை

கொள்ளையர்கள் தாங்கள் வந்த கார்களை விட்டு விட்டு நகை இருந்த காருடன் தப்பி விட்டனர்.

Coimbatore/Kochi:

கேரளாவைச் சேர்ந்த கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடைக்கு சொந்தமான ரூ. 1 கோடி மதிப்பலான நகையை 10 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துள்ளது. நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் சினிமா ஸ்டைலில் நடந்திருக்கிறது.

கேரளாவில் திரிச்சூர் நகரில் செயல்பட்டு வரும் கல்யாண் ஜூவல்லர்ஸில் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தது. இதனை கடை ஊழியர்கள் 2 பேர் காரில் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.

கேரளா - தமிழக எல்லையில் சாவடி பகுதியில் பெட்ரோல் நிரப்புவதற்காக கார் நிறுத்தப்பட்டது. அப்போது 2 வாகனங்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், நகை இருந்த காரை மறித்து அதில் இருந்தவர்களை வெளியே இழுத்துப்போட்டது. இதன்பின்னர், திருடர்கள்  தாங்கள் வந்த வாகனங்களை விட்டு விட்டு நகை இருந்த காருடன் கொள்ளை கும்பல் தப்பிச் சென்று விட்டது.

இதுதொடர்பாக கேரளாவின் பாலக்காடு மற்றும் தமிழகத்தின் சாவடி காவல்துறையில் நகைக்கடை சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

.