Read in English
This Article is From Jun 30, 2020

ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரண வழக்கு: காவலர்களுக்கு எதிராக சாட்டை சுழற்றிய நீதிமன்றம்!

ஜூன் 22 ஆம் தேதி பென்னிக்ஸ், மருத்துவமனையில் இறந்துவிட, அவரின் தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் காலமானார்.

Advertisement
தமிழ்நாடு Edited by

காவல் துறையால் கைது செய்யப்பட்ட இருவரும் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது

Highlights

  • சாத்தான்குளம் சம்பவம் இந்தியளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன
  • போலீஸ் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது
  • தற்போது இந்த வழக்கு விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
Chennai :

தூத்துக்குடியின் சாத்தான்குளத்தில் காவலர்களின் பிடியில் இருந்தபோது உயிரிழந்த தந்தை மகனான, ஜெயராஜ் - பென்னிக்ஸ் விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இருவரின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் சமர்பிக்கப்பட்டு உள்ளதால் நீதிமன்றம், ‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதற்கு முகாந்திரம் உள்ளது,' என்று கறாராக குறிப்பிட்டுள்ளது. 

ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக இரண்டு காவல் அதிகாரிகள் மற்றும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மீது புகார் சுமத்தப்பட்டது. மூவர் மீதும் போலீஸ் தரப்பு, துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணையின்போது 3 காவலர்களும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. 

முன்னதாக வழக்கு குறித்து நீதிமன்ற மாஜிஸ்திரேட் விசாரணையின்போது கான்ஸ்டபிள் மகாராஜன், “நீங்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது,” என்று மிரட்டியுள்ளதாக நீதிமன்றத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதை சுட்டிக்காட்டி நீதிமன்றம், துணை எஸ்.பி சி.பிராதபன், கூடுதல் துணை எஸ்.பி டி.குமார் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் மகாராஜன் மீது நீதிமன்ற அவமதிப்புக்கு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. 

Advertisement

கடந்த ஜூன் 19 ஆம் தேதி, தூத்துக்குடியின் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி, தங்களின் கடையை சுமார் 15 நிமிடம் கூடுதலாக திறந்து வைத்தனர் என்று குற்றம் சாட்டி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை காவல் துறை கைது செய்தது. போலீஸ் தரப்பு, ‘ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களை அவர்கள் மிரட்டவும் செய்தனர். சாலையில் படுத்து உருண்டதால் அவர்களின் உடலில் காயம் ஏற்பட்டது,' என்று கூறியிருந்தது. 

காவல் துறையால் கைது செய்யப்பட்ட இருவரும் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. உடலில் உள்ளேயும் வெளியேயும் காயங்கள் இருந்ததாக சொல்லும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர், பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் பகுதிகளிலும் ரத்தம் வடிந்ததாக அதிர்ச்சிப் புகார்களை சுமத்தியுள்ளனர். 

Advertisement

ஜூன் 22 ஆம் தேதி பென்னிக்ஸ், மருத்துவமனையில் இறந்துவிட, அவரின் தந்தை அடுத்த நாள் காலமானார். இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு, சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ளது.

Advertisement