This Article is From Dec 24, 2019

சமகாலத்தில் ஜார்கண்ட் வெற்றி என்பது மிகவும் முக்கியமானது: சோனியா நெகிழ்ச்சி!

Jharkhand Assembly Election Result 2019: ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 41 தொகுதிகளை கைப்பற்றினால் பெரும்பான்மை என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

சமகாலத்தில் ஜார்கண்ட் வெற்றி என்பது மிகவும் முக்கியமானது: சோனியா நெகிழ்ச்சி!

ஜார்கண்ட் மக்களுக்கு சோனியா காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

New Delhi:

ஜார்கண்ட் முக்தி மோர்சா - காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணியின் வெற்றி 'சமகாலத்தில் மிக முக்கியம் வாய்ந்தது' என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.  

மேலும், இந்த சமூகத்தை சாதி வாரியாக, மத வாரியாக அதிகாரத்துடன் பிளவுப்படுத்தும் பாஜகவின் முயற்சியை ஜார்கண்ட் மாநில மக்கள் தோற்கடித்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மையமாக கொண்ட கூட்டணி மீது நம்பிக்கையை வெளிப்படுத்திய மாநில மக்களுக்கு நன்றி. இந்த வெற்றி சிறப்புமிக்கதுடன், 'சமகாலத்தில் மிக முக்கியம் வாய்ந்தது'.  

பாஜக மற்றும் அதன் பிளவுப்படுத்தும் கொள்கையையும் எளிதாக தோற்கடித்ததற்காக ஜார்கண்ட் மக்களுக்கு சிறப்பு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக சோனியா அதில் தெரிவித்துள்ளார். 
 


ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 41 தொகுதிகளை கைப்பற்றினால் பெரும்பான்மை என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக இருந்த சீபுசோரனின் மகன் ஹேமந்த் சோரனே முதல்வராக அடுத்த முதல்வராக பதவி வகிக்க உள்ளார். இவர் ஏற்கனவே, 2013- 14 வரை 17 மாதங்களுக்கு முதல்வராக பதவி வகித்துள்ளார். இதேபோல், அர்ஜூன் முண்டா தலைமையிலான பாஜக ஆட்சியில் துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். 

ஜார்கண்ட் முக்தி மோர்சா - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை தொடர்ந்து, முதல்வர் ரகுபர் தாஸ் நேற்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில், ஹேமந்த் சோரனுக்கும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இத்தனை வருடங்களாக மாநிலத்தில் சேவை செய்வதற்கு வாய்ப்பளித்த ஜார்கண்ட் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வாதகவும் அவர் கூறியுள்ளார். 

ஜார்கண்ட் வெற்றியை தொடர்ந்து, இந்த வருடத்தில் பாஜக இரண்டாவது மாநிலத்தை இழந்துள்ளது. 
 

.