বাংলায় পড়ুন Read in English
This Article is From Dec 24, 2019

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: காங். கூட்டணி 47, பாஜக கூட்டணி 25 இடங்களில் வெற்றி!!

Election Results 2019: 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் தொடங்கி 5 கட்டங்களாக நடைபெற்றது.

Advertisement
இந்தியா Edited by ,

ஜார்கண்டில் தேர்தல் நவம்பர் 30-ம் தேதி தொடங்கியது

New Delhi:

நடந்து முடிந்த ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி நிறைவு பெற்றுள்ளன. இதில் மொத்தம் உள்ள 81 இடங்களில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு 25 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. 

ஜார்க்கண்டில் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக ஆட்சி வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனையடுத்து, 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிச.20ம் தேதி வரை 5 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற்றது. 


தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்சா - ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணியே வெற்றி பெரும் என கணித்தன.

இந்த நிலையில், 46 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக முன்பு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் பொறுப்பேற்க உள்ளார்.

 முன்னதாக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 14 இடங்களில் 11 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேரலை:

Dec 23, 2019 13:37 (IST)
தேர்தல் முடிவுகள் பிற்பகல் 01.06 மணி நிலவரப்படி:

Dec 23, 2019 12:06 (IST)


தேர்தல் முடிவுகள் காலை 11.43 மணி நிலவரப்படி: 

Dec 23, 2019 11:15 (IST)
காலை 10.40 நிலவரப்படி:

Dec 23, 2019 10:41 (IST)

காலை 10.05 மணி நிலவரப்படி:

Dec 23, 2019 10:18 (IST)

காலை 9:54 மணி நிலவரப்படி: 

Advertisement
Dec 23, 2019 10:17 (IST)

ஜார்கண்டில் உள்ள 24 மாவட்ட தலைமையகத்தில் இன்று காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

Dec 23, 2019 09:20 (IST)
Dec 23, 2019 09:20 (IST)

ஜார்கண்ட் நேரடி தேர்தல் முடிவுகள்:  பாஜக காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முதலில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்த நிலையில், தற்போது பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 
Dec 23, 2019 09:03 (IST)

ஜார்கண்ட் நேரடி தேர்தல் முடிவுகள்: முதலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்பட்டது. அதனை முடித்து பின்னரே எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களில் (ஈ.வி.எம்) வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
Dec 23, 2019 08:58 (IST)



Advertisement