Read in English
This Article is From Dec 23, 2019

பாஜக தலைமையில் ஜார்கண்டில் ஆட்சி அமையும்: முதல்வர் ரகுபர் தாஸ் உறுதி!

ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பாஜக 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவையென்ற நிலையில், காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement
இந்தியா Edited by
Ranchi, Jharkhand:

ஜார்கண்ட் மாநில வாக்கு எண்ணிக்கையில், ஆளும் பாஜக பின்னடைவை சந்தித்த வரும் நிலையிலும், ‘பாஜக தலைமையில் ஜார்கண்டில் ஆட்சி அமைப்போம்' என அம்மாநில முதல்வர் ரகுபர் தாஸ் உறுதியுடன் கூறியுள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் மற்றுமே நிறைவுற்றுள்ள நிலையில், தற்போது தெளிவான தகவலை தர இயலாது.

மொத்தம் 17 முதல் 18 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டியுள்ளது. விளம்புநிலையானது குறுகிய அளவே வித்தியாசப்படுகிறது. அதனால், தற்போதுள்ள நிலை அப்படியே மாறி நாங்கள் விரைவில் முன்னிலைக்கு வருவோம் என்று அவர் கூறியுள்ளார். 

மேலும், அவர் கூறும்போது, அதற்குள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவர்கள் ஈடுபடட்டும். அவர்களை யாரும் தடுக்க முடியாது. ஒன்று அல்லது இரண்டு இடங்களில் பின்னடைவு ஏற்படலாம்.

சிலர் ஆட்சிக்கு எதிரான நிலையிலும் இருக்கலாம். எனினும், இறுதி முடிவை நாங்கள் மிகவும் நம்புகிறோம். பாஜக ஆட்சி அமைப்பதை நீங்கள் காண்பீர்கள் என்று அவர் கூறினார். 

2014 தேர்தலில் 37 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக தற்போது அதை விட சில கூடுதல் இடங்களை பெறலாம். முடிவுகளுக்கு பின்பே என்ன நடக்கிறது என்பது தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Advertisement

முதலமைச்சரின் இந்த பேட்டியின் போது, ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பாஜக 29 இடங்களில் முன்னிலை வகித்தது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவையென்ற நிலையில், காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

Advertisement