This Article is From Dec 26, 2019

வெற்றி பெற்றது காங். கூட்டணி! ஜார்க்கண்டில் 2-வது முறையாக முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்!!

Jharkhand election results: ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கடந்த மார்ச் மாதம் காங்கிரசுடன் கூட்டணி வைத்தது. தும்கா மற்றும் பரேட் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் ஹேமந்த் சோரன் போட்டியிட்டார்.

வெற்றி பெற்றது காங். கூட்டணி! ஜார்க்கண்டில் 2-வது முறையாக முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்!!

Jharkhand election results: ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஹேமந்த் சோரன்.

Ranchi:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன், மாநிலத்தின் முதல்வராக 2-வது முறையாக பொறுப்பு ஏற்கவுள்ளார். 

முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டபோது தொடக்கம் முதற்கொண்டே காங்கிரஸ் கூட்டணி பாஜகவை விட முன்னிலையில் இருந்தது. 

தேர்தல் வெற்றி குறித்து ஹேமந்த் சோரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,'ஜார்க்கண்ட் மக்கள் எங்களுக்கு பெருவாரியான இடங்களில் வெற்றியை கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று மாநிலத்தின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இந்த அத்தியாயம் முக்கியமான மைல் கல்லை எட்டும். ஜார்க்கண்ட் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதை அடைவதற்கான நேரம் இன்றைக்கு வந்து விட்டது. 

எனக்கு ஆதரவை தெரிவித்ததற்காக இந்த நேரத்தில் லாலுபிரசாத் யாதவ், சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.' என்றார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 5-வது முதல்வராக சோரன் பொறுப்பில் இருந்தார். தற்போது அவர் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார். வலுவான கூட்டணியை அமைத்து அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார். மாநிலத்தில் தனது முதல்வர் பதவியை 5 ஆண்டுகள் முழுமையாக பூர்த்தி செய்த ரகுபர் தாசை ஹேமந்த் சோரன் தோற்கடித்துள்ளார். 

2000-ல் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து 9 அரசுகள் பொறுப்பில் இருந்துள்ளன. 3 முறை குடியரசு தலைவர் ஆட்சி ஜார்க்கண்டில் அமல்படுத்தப்பட்டிருந்தது. 

மாநிலத்தில் 2 முறை முதல்வராக இருந்த மூத்த அரசியல் தலைவர் சிபு சோரனின் மகன்தான் இந்த ஹேமந்த் சோரன். தனது இளம் வயதிலேயே அரசியலுக்குள் நுழைந்த அவர், கடந்த 2009 முதல் 2013- வரையில் அர்ஜுன் முண்டா தலைமையிலான பாஜக கூட்டணி அரசில் துணை முதல்வராக பொறுப்பில் இருந்தார். 

2013 ஜனவரியில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுத்திக்கொண்டது. இதையடுத்து, குடியரசு தலைவர் ஆடசி அமலுக்கு வந்தது. 2013 ஜூலை மாதத்தின்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியை பிடித்தது. அப்போது நாட்டிலேயே இளம் முதல்வராக தனது 38-வயதில் சிபு சோரன் முதலமைச்சர் பதவியை ஏற்றார். 

இந்த முறைய அவரது ஆட்சி ஓராண்டு நீடித்தது. 2014-ல் மீண்டு பாஜக அதிகாரத்திற்கு வந்தது. 

இந்தநிலையில் தற்போது கடந்த மார்ச் மாதத்தில் காங்கிரசுக்கும், சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும் இடையில் கூட்டணி அமைக்கப்பட்டது. சோரன், தும்கா மற்றும் பரேத் தொகுதியில் போட்டியிட்டார். 

தனது 17 மாத கால முதல்வர் பதவியில், பெண்களுக்கு அரசுப் பணியில் 50 சதவீத இட ஒதுக்கீடு, மாவோயிஸ்ட் ஊடுருவலை சரந்தா, மேற்கு சிங்பூமில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்தி எதிர்கொண்டது, பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை ஏற்படுத்தியது போன்றவற்றால் மக்களின் செல்வாக்கை பெற்றார். 

மலைவாழ் மக்களும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று ஹேமந்த் சோரன் குரல் கொடுத்து வருகிறார். 
 

.