Read in English
This Article is From Jun 22, 2020

காருடன் ஆற்றில் மூழ்கிய புதுமணத் தம்பதிகள்: குதித்து காப்பாற்றிய ஊர் மக்கள்! வீடியோ

கிராமவாசிகள் அதன் ஜன்னல்களை உடைத்து, குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பாக வெளியே மீட்பதற்கு முன்னர், கார் ஆற்றில் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்குச் சென்றது.

Advertisement
இந்தியா Posted by
Palamu (Jharkhand):

ஜார்கண்டின் பாலாமு மாவட்டத்தில் புதுமணத் தம்பதிகள் உட்பட 3 பேர் சென்ற கார் ஆற்றிற்குள் விழுந்ததை தொடர்ந்து, ஊர் மக்கள் விரைந்து அவர்களை மீட்டுள்ளனர். 

உள்ளூர் மக்கள் சிலர் அந்த பக்கம் செல்லும் போது, ஆற்றிற்குள் கார் மூழ்கிக் கிடப்பதை பார்த்துள்ளனர். இதைத்தொடர்ந்து, காருக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்க ஊர் மக்கள் சிலர் உடனடியாக தண்ணீருக்குள் குதித்துள்ளனர். இதுதொடர்பான காட்சிகளில் மக்கள் சிலர் மூழ்கியிருக்கும் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

திருமணம் முடிந்து, மணமகனின் கிராமத்திற்கு திரும்பும்போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அவர்கள் பயணித்த கார் ஒரு பாலத்தில் இருந்து விழுந்து ஆற்றின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 

கிராமவாசிகள் அதன் ஜன்னல்களை உடைத்து, குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பாக வெளியே மீட்பதற்கு முன்னர், கார் ஆற்றில் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்குச் சென்றது.

Advertisement

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி மற்றும் பிற மாவட்டங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததற்கு இடையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
 

Advertisement