தப்ரெஸ் இறந்ததைத் தொடர்ந்து, அவர் இறப்பு குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- Shams Tabrez, 24, was accused of stealing a motorcycle
- He was tied to pole, beaten for over 7 hours, then handed to police
- His family has demanded that action be taken against police, the mob
Jamshedpur: கடந்த செவ்வாய் கிழமை ஜார்கண்டின் செரைகெலா கர்சவான் என்ற இடத்தில் இருந்த கும்பல், ஷாம்ஸ் தப்ரெஸ் என்னும் 24 வயது முஸ்லிமை, கம்பத்தில் கட்டிவைத்து அடித்த வீடியோ வைரலானது. கிட்டத்த 7 மணி நேரத்தக்கு தப்ரெஸ், அந்த கும்பலால் தாக்கப்பட்டார். பைக் திருடியதாக தப்ரெஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து புதன் கிழமை காலையில் அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தப்ரெஸைத் தாக்கியபோது, அந்த கும்பல், “ஜெய் ஸ்ரீ ராம்” “ஜெய் அனுமான்” என்று சொல்ல வற்புறுத்தியதாக தப்ரெஸின் குடும்பத்தார் குற்றம் சாட்டுகின்றனர்.
செவ்வாய் கிழமை தாக்கப்பட்ட தப்ரெஸ், சனிக்கிழமை இறந்துள்ளார். அவருக்குப் போலீஸ் சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் போலீஸ் மீது, சப்ரெஸைத் தாக்கிய நபர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றனர் குடும்ப உறுப்பினர்கள்.
சப்ரஸை, தாக்கிய கும்பல் காவல் துறையிடம் ஒப்படைத்ததை அடுத்து, உள்ளூர் மருத்துவமனையில் அவர் சோதிக்கப்பட்டு செரைகெலா சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், அவரின் நிலை தொடர்ந்து மோசமடையவே, மாவட்டத்தில் இருக்கும் சதார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றே போதே, இறந்துள்ளார்.
சப்ரெஸ் இறந்ததை ஏற்றுக் கொள்ள மறுத்த குடும்ப உறவுகள், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர். பின்னர் சப்ரெஸ், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கும் அவர் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
தப்ரெஸ் இறந்ததைத் தொடர்ந்து, அவர் இறப்பு குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தப்ரெஸ் அன்று எதேச்சையாக செரைகெலாவைத் தாண்டி சென்று கொண்டிருந்தான். அப்போது அங்கு ஒரு இரு சக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது. அதனால் தப்ரெஸ் மற்றும் அவனுடன் இருந்த இருவர் மீது ஊர் மக்கள் சந்தேகப்பட்டு அடித்துள்ளனர். ஒரு நாள் இரவு முழுவதும் அவனை அடித்துள்ளனர்.” என்று கூறுகிறார் குடும்ப உறவு ஒருவர்.
தப்ரெஸ், காவல் நிலையத்தில் இருந்தபோது, அவரை சென்று பார்த்த உறவினரையும் போலீஸார் மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.