This Article is From Jun 25, 2019

கும்பல் வன்முறையால் இஸ்லாமிய இளைஞர் பலியான விவகாரம்: 11 பேர் கைது!

தப்ரேஸ் அன்சாரியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அம்மாநில எதிர்கட்சியும், காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.

தப்ரேஸ் மற்றும் அவரது நண்பர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடந்துள்ளது.

Ranchi:

கடந்த வாரம் ஜார்கண்ட் மாநிலத்தில், 24 வயது இஸ்லாமிய இளைஞர் ஒருவரை கட்டி வைத்து ஒரு கும்பல் கடுமையாக தாக்கி, அவரை ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான் என்று கோஷம் எழுப்பச் சொல்லி மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட தப்ரேஸ் அன்சாரி என்ற அந்த இளைஞர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து, போலீசார் பிடியில் இருந்த தப்ரேஸ் 4 நாட்கள் கழித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிறப்பு விசராணைக்குழு விசாரணை மேற்கொண்டு, தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரிடம் ஆய்வுகளை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் செராய்கீலா கார்ஸவான் மாவட்டத்திலுள்ள தாட்கிதி கிராமத்தில் ஜுன் 18-ம் தேதி தப்ரீஸ் அன்சாரி என்ற இளைஞரை, பைக் திருடியதாக கூறி அந்த ஊர் மக்கள் மரத்தில் கட்டி வைத்து, சில மணி நேரங்கள் இரக்கமின்றி அடித்துள்ளனர். மேலும், அவரை ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான் என்று கோஷம் எழுப்பச் சொல்லி துன்புறுத்தியுள்ளனர்.

சில மணி நேரங்கள் கழித்து அங்கு வந்த காவல்துறையினர், தாக்கப்பட்ட தப்ரீஸை கைது செய்தனர். தொடரந்து நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்த தப்ரீஸை உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். பின்னர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னரே, அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த அன்சாரியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், முக்கியக் குற்றவாளியான பப்பு மண்டல் உள்ளிட்டவர்கள் மீது கொலை குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்களில் 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தப்ரேஸ் மனைவி சாசிதா பார்வீன் கூறும்போது, அவர் இஸ்லாமியர் என்பதால் மட்டுமே அவர் தாக்கப்பட்டுள்ளார். எனக்கு எனது கணவரை தவிர வேறு யாரும் கிடையாது. அவர் மட்டுமே எனக்கு துணையாக இருந்தார். எனக்கு உரிய நீதி வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தப்ரேஸ் அன்சாரியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அம்மாநில எதிர்கட்சியும், காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.

With input from PTI

.