தப்ரீஸ் அன்சாரி இறப்பு குறித்து சிறப்பு காவல்துறை குழு விசாரிக்கிறது.
Ranchi: ஜார்கண்டில் கும்பல் வன்முறையினால் பலியான தப்ரீஸ் அன்சாரி மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ய முற்பட்டதாக கூறி இந்து பெண்கள் அமைப்பு ஒன்று காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம், சரைய்கேலாகார்சவன் மாவட்டத்தைச் சேர்ந்த தப்ரீஸ் எனும் 22 வயது இளைஞரை ஒரு கும்பல் பைக் திருடியதாக கடந்த வாரம் கொடூரமாகத் தாக்கியது. அவரைத் தாக்கும்போது ஜெய் ஶ்ரீராம், ஜெய் அனுமன் என்று கூறுமாறு அந்த கும்பல் கட்டாயப்படுத்தியது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. படுகாயம் அடைந்த தப்ரீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.
இது குறித்து நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் பலியான தப்ரீஸ் அன்சாரி பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ய முற்பட்டதாக இந்து பெண்கள் அமைப்பு ஒன்று புகார் அளித்துள்ளது. இந்த புகார் குறித்தும் விசாரணை செய்ய உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.