This Article is From Nov 26, 2019

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் : உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 8 கோடி ரொக்கப் பணம் பறிமுதல்!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் வரும் 30 -ம்தேதி தொடங்கி டிசம்பர் 20-தேதிவரையில் நடைபெறுகிறது. வாக்குகள் டிசம்பர் 23-ம்தேதி எண்ணப்படுகின்றன.

Advertisement
இந்தியா

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட முயன்ற மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Ranchi:

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினய் குமர் சாபே தெரிவித்துள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் வரும் 30 -ம்தேதி தொடங்கி டிசம்பர் 20-தேதிவரையில் நடைபெறுகிறது. வாக்குகள் டிசம்பர் 23-ம்தேதி எண்ணப்படுகின்றன.

இங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன்பின்னர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பெரிய அளவிலான தொகை பறிமுதல் செய்யப்படுகிறது. 

அந்த வகையில் கடந்த நவம்பர் 1 முதல் நவம்பர் 25-ம்தேதி வரையில் மொத்தம் ரூ. 8.33 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

இதைத் தவிர்த்து சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட முயன்ற மதுபான பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்டதில் பரிசுப் பொருட்களின் மதிப்பு மட்டும ரூ. 1.85 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Advertisement
Advertisement