தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று ராம் மாதவ் கூறியுள்ளார்.
Srinagar: ஜார்க்கண்டில் எதிர்பார்த்ததை விட குறைவான இடங்களே கிடைத்தது என்று பாஜகவின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,'ஜார்க்கண்டில் நாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான இடங்களே எங்களுக்கு கிடைத்தன. இந்த தேர்தல் மிகவும் போட்டி மிக்கதாக இருக்கும் என்று நாங்கள் முன்னரே கணித்தோம். ஜார்க்கண்டை பொறுத்தளவில் ஒவ்வொரு தேர்தலின்போது ஆட்சி மாற்றம் நடந்து வருகிறது.
தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து, கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்' என்று தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையில் 3 கட்சிகளை கொண்ட வலுவான அணி ஜார்க்கண்டில் பாஜகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் முடிவுகள் கடந்த திங்களன்று வெளியானது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியை பொறுத்தளவில் மொத்தம் உள் 81 தொகுதிகளில் அக்கட்சிக்கு 30 தொகுதிகள் கிடைத்தன. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 16 தொகுதிகளும், ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு ஒரு தொகுதியும் கிடைத்தன.இதற்கிடையே ஜே.வி.எம். கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்கள் ஹேமந்த் சோரன் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவை பொறுத்தளவில் வாக்காளர்கள் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்தார்கள் என்றும், ஆனால் கூட்டணி கட்சியான சிவசேனா தங்களை ஒதுக்கி விட்டதாகவும் ராம் மாதவ் கூறினார்.