This Article is From Dec 27, 2019

''ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு டெல்லியிலும் பிரதிபலிக்கும்'' - ஆம் ஆத்மி நம்பிக்கை!!

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது உழைப்புக்காக மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவார்கள் என்பதை உணர்த்துகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

''ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு டெல்லியிலும் பிரதிபலிக்கும்'' - ஆம் ஆத்மி நம்பிக்கை!!

உள்ளூர் பிரச்னைகள் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகின்றன என்கிறார் சஞ்சய் சிங்.

New Delhi:

ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதை சுட்டிக் காட்டுவதாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது-

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்கள் அளித்திருக்கும் முடிவு, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதை நமக்கு உணர்த்துகின்றன. ஜார்க்கண்டில் உள்ளூர் பிரச்னைகள்தான் தேர்தலில் முக்கிய பங்கை வகித்தன. 

இன்றைக்கு கல்வி, சுகாதாரம், மக்கள்தொகை உள்ளிட்டவை டெல்லியில் முக்கிய பிரச்னைகளாக உள்ளன. அவற்றை சரி செய்வதற்கு நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால் தலைமையிலான அரசை மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வருவார்கள். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய கூட்டணி மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 47 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. 

டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இங்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2015-ல் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களைக் கைப்பற்றி ஆட்சிப்பொறுப்பை ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

.