ஜியோவின் நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மற்ற மொபைல் நெட்வொர்க்கிற்கான அழைப்புகளை ரிலையன்ஸ் ஜியோ கட்டணமாக்கியுள்ள நிலையில் ஐ.யு.சி. டாப் அப் வவுச்சர்களை (IUC Top up Voucher) ஜியோ அறிவித்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு-
ஜியோ ரூ. 10 டாப் அப்
இந்த பிளானின் படி ஜியோவைத் தவிர்த்து மற்ற மொபைல் நெட்வொர்க்கை 124 நிடத்திற்கு இலவசமாக தொடர்பு கொள்ள முடியும். கூடுதலாக 1 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.
ஜியோ ரூ. 20 டாப் அப்
மற்ற நெட்வொர்க்கை 249 நிமிடங்களுக்கு இலவசமாக தொடர்பு கொள்ள முடியும். கூடுதலாக 2 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.
ஜியோ ரூ. 50 டாப் அப்
656 நிமிடங்களுக்கு ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்கை தொடர்பு கொள்ள முடியும். எக்ஸ்ட்ரா 5 ஜி.பி. டேட்டா.
ஜியோ ரூ. 100 டாப் அப்
மற்ற நெட்வொர்க்கை 1362 நிமிடங்களுக்கு இலவசமாக தொடர்பு கொள்ளலாம். கூடுதலாக 10 ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஜியோவில் இருந்து மற்ற ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட மற்ற நெட்வொர்க்கிற்கான அழைப்புகள் இதுவரை இலசமாக வழங்கப்பட்டு வந்தது. இதனை நிமிடத்திற்கு 6 பைசா என்ற கட்டண முறைக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மாற்றியுள்ளது.
ஜியோவை பின்பற்றி மற்ற ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் கட்டண அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. தற்போது வரை இந்த நெட்வொர்க்குகளில் அழைப்புகள் இலவசமாக வைக்கப்பட்டுள்ளன.