This Article is From Jan 06, 2020

முகமூடி கும்பலை கண்டறிய சிசிடிவி காட்சிகளை ஆராய்து வருகிறோம்; காவல்துறை தகவல்

சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோக்கள் மற்றும் சிசிடிவி வீடியோக்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளம் காணப்பட்டு வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

முகமூடி கும்பலை கண்டறிய சிசிடிவி காட்சிகளை ஆராய்து வருகிறோம்; காவல்துறை தகவல்

முகமூடி அணிந்த 50 பேர் கொண்ட கும்பல் ஜேஎன்யூ பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்றிரவு நுழைந்தனர்.

New Delhi:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்றிரவு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி குண்டர்களை அடையாளம் காண சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் பதிவுகளின் ஸ்கிரின்ஷாட்டுகள், சிசிடிவி வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறையின் செயல்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை பல்வேறு புகார்கள் குவிந்ததை அடுத்து, போலீசார் முதல்கட்ட தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். 

டெல்லி காவல்துறையினர் இந்த வழக்கை குற்றப்பிரிவுக்கு ஒப்படைத்துள்ளனர். எனினும், இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கலவரம் மற்றும் பொதுச்சொத்துகளை சேதப்டுத்தியது தொடர்பான குற்றச்சாட்டு பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.   

எங்களுக்கு இரு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். எஃப்ஐஆர் பதிவுசெய்துள்ளோம், ஒரு சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோக்கள் மற்றும் சிசிடிவி வீடியோக்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளம் காணப்பட்டு வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த மாதம் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க கண்மூடித்தனமாக காவல்துறையினர் நடத்திய தாக்குதலால் டெல்லி காவல்துறையினருடன் ஏற்கனவே மாணவர்கள் முரண்பட்டிருந்த நிலையில், ஜேஎன்யூவில் நடந்த வன்முறை தாக்குதலை தடுக்க போலீசார் எந்த முயற்சியும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். 

3k5rv8kc

தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ். 

ஜேஎன்யூ மாணவர் அமைப்பின் துணைத் தலைவர் சாகேத் மூன் கூறும்போது, பிற்பகல் முதல் காவல்துறையினர் வளாகத்திற்குள் இருந்து வருகின்றனர். இருந்தும் அவர்கள் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். மற்றவர்கள் கூறும்போது, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க காலதாமதம் ஆனதாகவும், அவர்கள் வந்து எந்த கைது நடவடிக்கையும் செய்யவில்லை என்றும் கூறுகின்றனர். 

எனினும், டெல்லி காவல்துறையினர் தாங்கள் சரியான நேரத்திற்கு வந்ததாகவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் கூறுகின்றனர். தொடர்ந்து, வன்முறை நிகழ்ந்த சில மணி நேத்தில் போலீசார் ஒரு அணிவகுப்பை நடத்தினர். அப்போது, டெல்லி போலீசே திரும்பிச் செல் எனற கோஷங்களை மாணவர்கள் எழுப்பியுள்ளனர். 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இரும்பு கம்பிகள், சுத்தியல்கள், கற்கள் மற்றும் பாட்டில்களுடன் முகமூடி அணிந்த கும்பல் ஒரு கொடூரமான வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து தற்போது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதாவது, தாக்குதல் நடந்த சமயத்தில் தெரு விளக்குகள் அணைக்கப்பட்டது, இதில் போலீசாரின் பங்கு போன்ற கேள்விகள் எழுகின்றன. 

மேலும், பல்கலைக்கழக வளாகத்திற்குள் முகமூடி அணிந்த 50 பேர் ஆயுதங்களை ஏந்தியபடி வளாகத்திற்குள் நுழைந்தது மட்டுமல்லாமல்,  சுமார் மூன்று மணி நேரம் அவர்கள் வளாகத்திற்குள் சுற்றி வந்துள்ளனர். அதனை காவல்துறையும், கல்லூரி நிர்வாகமும் தடுத்து நிறுத்தவில்லை. 

ஆம்புலான்ஸ் மற்றும் மருத்துவ சேவைகளும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 
 

With input from PTI, IANS

.