বাংলায় পড়ুন Read in English
This Article is From Jan 11, 2020

JNU தாக்குதலில் ஈடுபட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!!

JNU Violence : தாக்குதலில் தொடர்புடைய மாணவர்கள் அமைப்புகள் என இடதுசாரிகளையும், பாஜக ஆதரவு அமைப்பான ஏ.பி.வி.பி. யையும் போலீசார் கூறியுள்ளனர். இரு அமைப்பினரும் வெளியே உள்ளவர்களிடம் இருந்து ஆதரவு தேடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from Agencies)

JNU Attack : சுமார் 70 முதல் 100 வரையிலானவர்கள் ஜே.என்.யூ. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்தினர்.

New Delhi:

.

ஜே.என்.யூ. தாக்குதலில் தொடர்புடையதாக 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று போலீசார் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 60 பேர் ஈடுபட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

தாக்குதலில் ஈடுபட்டவர்களில் சுமார் 10 பேர் வெளியே உள்ளவர்கள். அவர்கள் மாணவர்கள் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிறன்று ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்திற்குள் புகுந்து முகமூடி அணிந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 34 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். தாக்குதலில் தொடர்புடைய மாணவர்கள் அமைப்புகள் என இடதுசாரிகளையும், பாஜக ஆதரவு அமைப்பான ஏ.பி.வி.பி. யையும் போலீசார் கூறியுள்ளனர். இரு அமைப்பினரும் வெளியே உள்ளவர்களிடம் இருந்து ஆதரவு தேடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களில் மணிஷ் ஜாங்கிட் என்பவரும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ஜே.என்.யூ.வில் ஏ.பி.வி.பி. அமைப்புடைய செயலாளராக இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து என்.டி.டி.வி.க்கு அவர் அளித்த பேட்டியில், தனது மொபைல் போன் உடைந்து விட்டதாகவும், அதனை ரிப்பேர் செய்து பார்த்த பின்னர்தான் தான் வாட்ஸ்ஆப் குழுவில் இருப்பது தெரியவந்ததாகவும் கூறினார். 

இதற்கிடையே பல்கலைக் கழக துணை வேந்தர் ஜெகதீஷ் குமார், மாணவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

Advertisement

கடந்த ஞாயிறன்று தாக்குதல் நடந்த பின்னர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணை வேந்தர் தவறி விட்டார் என்று கூறி குமாருக்கு எதிராக கடும்  விமர்சனங்கள் கிளம்பின. 

இதுதொடர்பாக டெல்லி போலீசாரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். தாக்குதல் நடந்ததை போலீசார் வேடிக்கை பார்த்ததை தவிர,வேறொன்றும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. 

Advertisement

நேற்று ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர் தலைவர் அய்ஷே கோஷின் பெயரை தாக்குதல் நடத்தியவர்களின் பட்டியலில் டெல்லி போலீசார் சேர்த்தனர். அவருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். 

போலீசார் வெளியிட்ட புகைப்பட ஆதாரங்களின்படி அய்ஷே கோஷ், யோகேந்திர பரத்வாஜ், விகாஸ் படேல் உள்ளிட்டோரது பெயர் இடம் பெற்றது. யோகேந்திர பரத்வாஜும், படேலும் ஏ.பி.வி.பி. உறுப்பினர்கள் என்று கூறப்படுகிறது. 

Advertisement

இதுதொடர்பாக கிரைம் பிராஞ்ச் டிசிபி, ஜாய் திர்கி கூறுகையில், 'இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அதே நேரத்தில் சந்தேகப்படும் அனைவருக்கும் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்' என்று கூறியுள்ளார். அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. 

.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் குமார், பல்வேறு சங்கங்களை சேர்ந்த 29 மாணவர்கள் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

Advertisement

துணை வேந்தர் கூறுகையில், 'பிரச்னை இதுதான்... பல மாணவர்கள் விடுதியில் தங்கியுள்ளனர். அவர்கள் வெளியே உள்ளவர்களாக இருக்கலாம். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனென்றால் அவர்களுக்கும், இந்த பல்கலைக் கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது' என்று தெரிவித்தார். 
 

விடுதிக்கு வெளியே சிசிடிவி கேமராக்களை பொருத்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் துணை வேந்தர் பேசினார்.

முன்னதாக ஜனவரி 5-ம்தேதி நடந்த தாக்குதல் துரதிருஷ்வசமானது என்றும் வேதனை அளிக்கிறது என்றும் துணை வேந்தர் தெரிவித்திருந்தார்.
 

Advertisement

ஞாயிறன்று நடந்த தாக்குதலின்போது குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு போதிய சிசிடிவி ஆதாரங்கள் இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டுகள் இணையத்தில் வைரலாகின. 

இதுகுறித்து பேட்டியளித்த ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவர் அய்ஷே கோஷ், தான் முகமூடி அணிந்தவர்களில் ஒருவர் இல்லை என்றும், தான் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் எனவும் கூறினார். தான் இன்னும் ரத்தம் படிந்த உடையில் இருப்பதாக அவர் பேசியிருந்தார். 

கோஷ் மீது டெல்லி காவல்துறை 2 முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டும் கோஷ் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு சில நிமிடங்களுக்குள்ளாக நடந்திருக்கிறது. 

வன்முறை தொடர்பாக ஒரு வழக்கினை போலீசார் பதிவு செய்துள்ளனர். 70 முதல் 100 முகமூடி அணிந்த கும்பல் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்திற்குள் நுழைந்து இரும்புக் கம்பி, சுத்தியல், உடைந்த கண்ணாடி பாட்டில்களால் தாக்குதல் நடத்தியிருந்தது. 

இதற்கிடைய ஜே.என்.யூ. பேராசிரியர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். குற்றவாளிகளை அடையாளம் காட்டும் அளவுக்கு சிசிடிவி கேமரா பதிவுகள், வாட்ஸ்ஆப் மெசேஜ்கள் இருப்பதாக அவர்கள் கூறியிருந்தனர். இந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது. 

With input from PTI, ANI

Advertisement