This Article is From Jan 09, 2020

JNU Attack : ஜே.என்.யூ. தாக்குதலில் பாஜக ஆதரவு மாணவர் அமைப்புக்கு தொடர்பா? Exclusive Images

JNU Attack : ஜே.என்.யூ. தாக்குதல் தொடர்பாக கிடைத்திருக்கும் புகைப்படங்கள், தாக்குதலுக்கும் பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் ஏ.பி.வி.பி. (ABVP)க்கும் தொடர்பிருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

JNU Attack : ரவுடி கும்பல் நடத்திய தாக்குதலில் ஜே.என்.யூ. பல்கலைக் கழக ஆசிரியர்கள், மாணவர்கள் சிலர் காயம் அடைந்தனர்.

New Delhi:

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் எனப்படும் ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்திற்குள் புகுந்து, முகமூடி அணிந்திருந்த ரவுடி கும்பல் தாக்குதலை நடத்தியது. இதில் சில ஆசிரியர்கள், மாணவர்கள் காயம் அடைந்தனர். மொத்தம் 34 பேர் காயம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சம்பந்தமாக வெளி வந்துள்ள புகைப்படங்கள், பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் ஏ.பி.வி.பி.க்கும் தாக்குதலுக்கும் தொடர்பிருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன. 

தாக்குதல் தொடர்பாக  வெளிவந்துள்ள புகைப்படத்தில் வருபவர் விகாஸ் படேல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், ஜே.என்.யூ.வில் ஏ.பி.வி.பி.யுடைய செயற்குழுவில் இடம் பெற்றிருக்கிறார். அவரைச் சுற்றிலும் இளைஞர்கள் உருட்டுக் கட்டைகளுடன் நிற்கின்றனர். 

அவர், டெல்லி போலீசாருக்கு வழங்கப்படும் லத்தியைப் போன்ற ஒன்றை வைத்திருக்கிறார். 

அவருக்கு அருகே நீலம் மற்றும் மஞ்சள் நிற டி-ஷர்ட்டை ஒருவர் அணிந்திருக்கிறார். அவர், ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்த ஷிவ் பூஜன் என்பதும், அவர் ஜே.என்.யூ.வில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. 

இந்த புகைப்படங்கள் அனைத்தும், ஞாயிறன்று மதியம் ஜே.என்.யூ. தாக்குதலுக்கு முன்பாக எடுக்கப்பட்டுள்ளது. 
 

s66p699k

விகாஸ் படேல் (வலது பக்கம் இருப்பவர்), ஷிவ் பூஜன் மண்டல் (நடுவில் மஞ்சள் டீஷர்ட் அணிந்திருப்பவர்).

இன்னொரு புகைப்படத்தில் ஷிவ் பூஜன், கையில் தடியை வைத்திருக்கும் கும்பலோடு இருக்கிறார். அவர்கள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்வது போல் புகைப்படம் உள்ளது. 

mtpmb5fg

ஜே.என்.யூ. வளாகத்திற்குள் கையில் கட்டைகளை எடுத்துக்கொண்டு மாணவர்கள் செல்லும் காட்சி.h4u8ss08

ஜே.என்.யூ. வளாகத்திற்குள் செல்லும் கும்பல்

இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோவிலும், ஷிவ் பூஜன் மண்டல் இடம்பெற்றிருக்கிறார். உடன் ஆயுதம் தாங்கிய கும்பல் உள்ளது.
.

இந்த சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில், படேல் மற்றும் மண்டல் ஆகியோர் தங்களது சமூக வலைதள கணக்குகளை அழித்துள்ளனர். 

முன்னதாக ஏ.பி.வி.பி. உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கும் வாட்ஸ்ஆப் குழுவில், ஜே.என்.யூ. மீது நடத்தவிருக்கும் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. இதில், படேலின் போன் நம்பரும் இடம்பெற்றுள்ளது. 

9edfj8cg

இந்த ஆலோசனையில், ஜே.என்.யூ.வில் சமஸ்கிருதம் படிக்கும் யோகேந்திர பரத்வாஜ், பி.எச்.டி. படிக்கும் சந்தீப் சிங் ஆகியோரும் உள்ளனர்.

பரத்வாஜ் தனது சமூக வலைதள கணக்குகளை அழித்திருக்கிறார். ஆனால் அவரது ட்விட்டர் ப்ரோஃபைல், அவர் ஏ.பி.வி.பி. உறுப்பினர் என்பதை அடையாளம் காட்டுகிறது. 

சந்தீப் சிங்கும் தனது சமூக வலைதள கணக்குகளை அழித்துள்ளார். 

jc9kk2s

யோகேந்திர பரத்வாஜ் தனது ட்விட்டர் கணக்கை டி ஆக்டிவேட் செய்துள்ளார்..

1n5cioas

யோகேந்திர பரத்வாஜின் ட்விட்டர் பதிவு..

rkkdlj8g

சந்தீப் சிங் (நடுவில் இருப்பவர்) அவரது ட்விட்டர் கணக்கின்படி அவர், ஜே.என்.யூ.வின் பி.எச்டி மாணவர் என்பதும், அவர் ஏ.பி.வி.பி. உறுப்பினர் என்பதும் தெரியவந்துள்ளது..

வாட்ஸ்ஆப்பில் பரத்வாஜ் கடைசியாக, 'இடதுசாரி தீவிரவாதம்' மற்றும் 'நாம் அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்து தாக்க வேண்டும்' என்று வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த வார்த்தைகள் அனைத்தும் ஜே.என்.யூ.க்குள் நுழைவதற்கு உள்ள பல்வேறு வழிகள், DU எனப்படும் டெல்லி பல்கலைக் கழகத்தினரின் உதவியை பெறுவது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளன. 

ஜே.என்.யூ. தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று, ஏ.பி.வி.பி. அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இடதுசாரி மாணவர் அமைப்பு மீது தாக்கப்பட்ட இந்த சம்பவத்தை ஏபிவிபி கண்டித்துள்ளது. 

.