This Article is From Jan 07, 2020

‘ஜெய் ஶ்ரீ ராம்’ என்று கத்தியபடி தாக்கினார்கள் - நியூ யார்க் டைம்ஸ் கட்டுரையில் நேரடி சாட்சியின் வாக்குமூலம்

தலையில் காயம் அடைந்த ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத்த்தின் தலைவர் ஆயி கோஷ் மீதான தாக்குதலையும் முகமூடி அணிந்த குண்டர்கள் தாக்கும் காட்சியையும் ‘நான் கொடூரமாக தாக்கப்பட்டேன்’ என்ற என்ற மாணவரின் அறிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளது.

‘ஜெய் ஶ்ரீ ராம்’ என்று கத்தியபடி தாக்கினார்கள்  - நியூ யார்க் டைம்ஸ் கட்டுரையில் நேரடி சாட்சியின் வாக்குமூலம்

தாக்கப்பட்ட மாணவர்கள் யாவரும் தாராளவாத தலைவர்களை குறிவைத்து எதிர்ப்பவர்களையே தாக்கியுள்ளதாக கூறியுள்ளது.

New Delhi:

டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை குறிவைத்து முகமூடி அணிந்த தாக்குதல் குழு மாணவர்களையும் ஆசிரியர்களையும் தாக்கியது. தாக்குதல் நடத்திய குழு 'ஜெய் ஶ்ரீ ராம்' என்று கத்திய படி தாக்கியது என்று  நியூயார்க் டைம்ஸ் சாட்சிகளை மேற்கோள் காட்டி தெளிவான  கட்டுரை ஒன்றை எழுதி வைத்துள்ளது. 

NDTVயின் தனிப்பட்ட ட்விட்டர் பதிவுகளை மேற்கொள் காட்டி எழுதப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கட்டிடங்களில் ஒன்றில் தாக்குதல் குழு  வரும் போது மற்ற மாணவர்கள் ‘திரும்பி போ' என்று கத்துகிற வீடியோ சமூக ஊடகங்களிலும் பரவலாக பகிரப்பட்டுள்ளது. 

தலையில் காயம் அடைந்த ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத்த்தின் தலைவர் ஆயி கோஷ் மீதான தாக்குதலையும் முகமூடி அணிந்த குண்டர்கள் தாக்கும் காட்சியையும் ‘நான் கொடூரமாக தாக்கப்பட்டேன்' என்ற என்ற மாணவரின் அறிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளது. 

இந்த தாக்குதலில் 42 பேர் காயமடைந்தனர் அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். பாஜகவுடன் இணைக்கப்பட்ட மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யாத்த பரிஷத் என்ற ஏபிவிபி உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்தக் குழு இதனை மறுத்துவிட்டது.  மாணவர்களின் மீதான தாக்குதல் என்பது பல்கலைக்கழகத்தின் கட்டணங்கள் உயர்வோடு தொடர்புடையது என்று கட்டுரை கூறுகிறது. தாக்கப்பட்ட மாணவர்கள் யாவரும் தாராளவாத தலைவர்களை குறிவைத்து எதிர்ப்பவர்களையே தாக்கியுள்ளது என்று கூறியுள்ளது.

டிசம்பர் தொடக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்திற்உ எதிரான பிற எதிர்ப்புகள் மீதான காவல்துறை ஒடுக்குமுறையை கட்டுரை மேற்கோள் காட்டியுள்ளது. ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையாக மோதல் ஏற்பட்டு. காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை நூலகத்திற்குள் வீசினர். கூட்டமாக துப்பாக்கி சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

.