This Article is From Jan 06, 2020

ஜேஎன்யூ-வில் முகமூடிக் கும்பல் கொடூரத் தாக்குதல்: மாணவர்கள், ஆசிரியர்கள் 24 பேர் படுகாயம்!

முகமூடி அணிந்த குண்டர்களால் நான் கொடூரமாக தாக்கப்பட்டேன் என மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • 50-odd goons entered the campus around 6.30 pm: Eyewitness
  • Around 40 students and 12 teachers were injured
  • Police held a flag march in the evening and declared the situation normal
New Delhi:

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் நேற்று மாலை முகமூடி அணிந்து இரும்பு கம்பிகள் மற்றும் கற்களுடன் நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியது. இதில் இடதுசாரிகள் அமைப்பை சேர்ந்த 30 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி காரணம் என்று இடதுசாரிகள் மாணவர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. 

இதனிடையே, ஜே.என்.யூ அதிகாரிகள் போலீசாருக்கு அழைப்பு விடுத்ததின் பேரில் பல்கலைக்கழகத்திற்குள் வந்த போலீசார் அங்கு அணிவகுப்புகளை நடத்தி மீண்டும் அமைதி நிலைக்கு கொண்டு வந்தனர். எனினும், வளாகத்திற்குள் இருக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து வருகின்றனர். பல்கலைக்கழக அதிகாரிகளும், காவல்துறையினரும் இந்த கொடூரத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இதனிடையே, நேற்றிரவு டெல்லி தலைமை காவல்துறை அதிகாரி அமுல்யா பட்நாயக்கை தொடர்பு கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போதைய நிலவரம் குறித்து அறிக்கை கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நூற்றுக்கணக்கானவர்கள் டெல்லி தலைமை காவல்துறை வளாகத்திற்கு வெளியில் கூடினர். 

இந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, மாலை 6.30 மணியளவில் 50 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் வளாகத்திற்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளனர். ஏபிவிபியை சேர்ந்த குண்டர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்றும், மாணவர்களை பாதுகாக்க நினைத்த ஆசிரியர்களையும் அவர்கள் தாக்கியதாக மாணவர் அமைப்பு தனது ட்வீட்டரில் தெரிவித்திருந்தது. 

ஜேஎன்யூ மாணவர் அமைப்பின் துணைத் தலைவர் சாகேத் மூன் கூறும்போது, பிற்பகல் முதல் காவல்துறையினர் வளாகத்திற்குள் இருந்து வருகின்றனர். இருந்தும் அவர்கள் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். மற்றவர்கள் கூறும்போது, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க காலதாமதம் ஆனதாகவும், அவர்கள் வந்து எந்த கைது நடவடிக்கையும் செய்யவில்லை என்றும் கூறுகின்றனர். 

பேராசியர் அதுல் சூத் கூறும்போது, அந்த கும்பல் பெரும் கற்களை எறிந்த படி விடுதிக்குள் நுழைந்தது. அவை சாதாரண சிறிய கற்கள் அல்ல. அது நமது எலும்புகளை கூட உடைக்கும அளவிலான பெரிய கற்கள். நான் பக்கத்தில் இருந்த வழியாக தப்பித்து வெளியே வந்து பார்த்த போது, அவர்கள் என் கார் உட்பட பல கார்களை அடித்து நெருக்கி சேதப்படுத்தியிருந்தனர். 

வன்முறையைக் கண்டித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த வன்முறை சம்பவம் கட்டண உயர்வு தொடர்பான கிளர்ச்சியுடன் தொடர்புடையது. கட்டண உயர்வை எதிர்ப்பவர்கள் மாணவர்கள் சேர்க்கை செயல்முறையை சீர்குலைக்க விரும்பினர். இதனால், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மோதல்கள் மற்றும் காழ்ப்புணர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை, பதிவு செயல்முறைக்கு எதிரான மாணவர்கள் காவல்துறையினரை அடைவதற்கு முன்னர் அதற்கு ஆதரவானவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, மூத்த காவல்துறை அதிகாரி தேவேந்திர ஆர்யா கூறும்போது, பல்கலைக்கழத்திற்குள் தற்போது இயல்பு நிலையில் உள்ளது. நாங்கள் ஒரு மிகப்பெரிய அணிவகுப்பை வளாகத்திற்குள் மேற்கொண்டோம். விடுதி இருக்கும் பகுதியிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வன்முறை குறித்து எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. பல்கலைக்கழக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக அளித்த கோரிக்கையின் பேரிலே நாங்கள் வளாகத்திற்குள் நுழைந்தோம் என்று அவர் கூறினார். 

இதைத்தொடர்ந்து, காயமடைந்த மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நேரில் சென்று பிரியங்கா காந்தி காயமடைந்தவர்களை பார்வையிட்டார். ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ், இரத்தம் சொட்ட மருத்துவமனை அழைத்தச்செல்லப்பட்டார். முகமூடி அணிந்த குண்டர்களால் நான் கொடூரமாக தாக்கப்பட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, ஏபிவிபி தனது ட்வீட்டர் பதிவில், இடதுசாரிகள் மாணவர்கள் அமைப்பான எஸ்.எஃப்.ஐ, ஏ.ஐ.எஸ்.ஏ, மற்றும் டி.எஸ்.எஃப் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த மாணவர்களால் தாங்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதில், 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்றும் மேலும், 11 மாணவர்கள் இருக்கும் இடம் குறித்து எந்த தகவலும் இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். பல ஏபிவிபி மாணவர்கள் விடுதிகளில் தாக்கப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளனர். 

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது ட்வீட்டர் பதிவில், #JNUவில் என்ன நடக்கிறது என்பதற்கான புகைப்படங்களை பார்த்தேன். வன்முறையை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன். இது பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்திற்கும் கலாச்சாரத்திற்கும் முற்றிலும் எதிரானது. என்று அவர் தெரிவித்துள்ளார்.

.