This Article is From Jan 08, 2020

நீங்களும் கடந்த காலம்தான்; துணைவேந்தர் பொறுப்பிலிருந்து விலகுங்கள் : ப. சிதம்பரம் அறிவுரை

பல்கலைக்கழகத்தில் இயல்பு நிலை திரும்பவேண்டும். நடந்தை கடந்த காலத்திற்கு பின் தள்ளிவிட்டு விடுங்கள்” என்று கூறியிருந்தார்.

நீங்களும் கடந்த காலம்தான்; துணைவேந்தர் பொறுப்பிலிருந்து விலகுங்கள் : ப. சிதம்பரம் அறிவுரை

நீங்களும் கடந்த காலம் தான். நீங்களும் ஜே.என்.யூவை விட்டு வெளியேறுங்கள் - ப.சிதம்பரம்

New Delhi:

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் துணைவேந்தர் எம். ஜெகதீஷ் குமார், “தனது சொந்த ஆலோசனையை பின்பற்றி துணைவேந்தர் பதவியிலிருந்து பதவி விலக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஜே.என்.யூ வளாகத்தில் முகமூடி அணிந்த கும்பர் மாணவர்களையும் ஆசியர்களையும் தாக்கியது இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் ட்விட் பதிவு செய்துள்ளார்.

“ஜே.என்.யூவின் மாணவர்களும் கடந்த காலத்தை பின்னுக்கு தள்ளவே விரும்புகிறார்கள். நீங்களும் கடந்த காலம் தான். நீங்களும் ஜே.என்.யூவை விட்டு வெளியேறுங்கள்” என்று தெரிவித்திருந்தார். 

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் நடந்த சம்பவம் குறித்து “கடந்த ஜனவரி 5, ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க வன்முறை தீர்வல்ல. பல்கலைக்கழகத்தில் இயல்பு நிலை திரும்பவேண்டும். நடந்தை கடந்த காலத்திற்கு பின் தள்ளிவிட்டு விடுங்கள்”
 என்று கூறியிருந்தார். 

“குளிர்கால செமஸ்டருக்கான பதிவு தொடங்கி விட்டது. மாணவர்கள் பங்கேற்க வேண்டும் கோரியிருந்தார்.”

பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயலற்ற தன்மைக்கு துணை வேந்தர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பல ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் துணைவேந்தரை நீக்க வேண்டுமென கடிதம் ஒன்றினை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்க்கு எழுதியுள்ளனர். 

.